- Home
- Lifestyle
- Kamarajar: கல்வி தந்தை காமராஜரின் 120வது பிறந்தநாள்... ஏழைகளின் கல்வி வளர்ச்சிக்கு கர்மவீரர் ஆற்றிய சேவை...
Kamarajar: கல்வி தந்தை காமராஜரின் 120வது பிறந்தநாள்... ஏழைகளின் கல்வி வளர்ச்சிக்கு கர்மவீரர் ஆற்றிய சேவை...
Kamarajar: கல்வி கண் திறந்த காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் ஏழைகளின் கல்விக்கு ஆற்றிய சேவை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Kamarajar
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
Kamarajar
கர்மவீரர் என்று அன்போடு அழைக்கப்படும்,காமராஜர் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று விருதுநகரில் பிறந்தவர். இவரது தந்தை குமாரசாமி- தயார் சிவகாமி அம்மாள் ஆவார். தன்னுடைய இளமை பருவத்தில், காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தவர். பின்னர் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். குறிப்பாக, 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
Kamarajar
தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட காமராஜர். தன்னுடைய 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். பள்ளி செல்லும் மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி ஊக்கமளித்தவர். ஏழை மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பதற்கு ஆரம்பமாக, எட்டயபுரத்திலேயே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Kamarajar
பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டில் ஏழைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தவர். இலவச கல்வி, மதிய உணவு, சீருடை என கல்வி வளர்ச்சி ஒன்றே இந்த நாட்டின் வளர்ச்சி என்பதை எப்போதும் கருத்தில் கொண்டு செயல்பட்டவர். அதுமட்டுமின்று, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தமிழக கிராமங்கள் பேருந்துகள், மின்சார விளக்குகளை பெற்றது காமராஜரின் ஆட்சியில் தான். இப்படி, தன்னுடைய வாழ்நாளை தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராக விளங்கினார்.
Kamarajar
மேலும், கடந்த 1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் காமராஜர் பொறுப்பேற்றவர்.நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் இரண்டு முறை பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து, காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு, கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப் பட்டது.