- Home
- Lifestyle
- Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு...இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்..
Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு...இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்..
Horoscope Today- Indriya Rasipalan junly 29 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய 12 ராசிகளின் என்னென்னெ பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றி நிச்சயம்.புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.வாழ்வில் புது ஒளி பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற வாக்குவாதங்கள் விலகும். கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பாராத அளவிற்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் நிறைவேறும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனையை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாகஇருக்கும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சமுதாய அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மை கிடைக்கும் பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடாமுயற்சி வெற்றியை தரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கால தாமதமாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனை உதிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் சமாதானம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற சஞ்சலங்கள் தவிர்ப்பது நல்லது.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணவரவு குறித்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து அவசியம்.