- Home
- Lifestyle
- Budhan Peyarchi 2022: ஆகஸ்ட்1ல் புதன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி கடலில் நீந்துவர்..
Budhan Peyarchi 2022: ஆகஸ்ட்1ல் புதன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி கடலில் நீந்துவர்..
Budhan Peyarchi 2022 Palangal: புதன் கிரகம் ஆகஸ்ட் 1, 2022 அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் நுழைகிறது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். யார் அந்த ராசிகள் என்பதை இந்தபதிவின் மூலம் பார்க்கலாம்.

Budhan Peyarchi 2022:
ஆகஸ்ட்1ல் புதன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் படி, புத்தி, பணம், வியாபாரம், செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படும் புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. அதன்படி, புதன் கிரகம் தற்போது கடகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 1, 2022 அன்று சிம்ம ராசியில் நுழைகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தரும். எனினும், குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 2022 மிக அற்புதமாக அமையும். புதனின் இந்த பெயர்ச்சியால், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் வெற்றி கிடைக்கும். அதிகப்படியான திடீர் பண வரவு இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை பற்றி காணலாம்.
Budhan Peyarchi 2022:
ரிஷபம்:
புதனின் மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நன்மை தரும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் ஏற்படும்.
Budhan Peyarchi 2022:
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன மகிழ்ச்சியையும் அமைதியையும் உணர்வீர்கள். குடும்பத்தின் பெரியவரிடமிருந்து பணம் பெறலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலிக் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
Budhan Peyarchi 2022:
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். திடீர் பண உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். அதிகாரிகளின் உதவியால் பணிகள் எளிதாகும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
Budhan Peyarchi 2022:
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு மூத்தவர்களின் உதவியால் தொழிலில் நன்மைகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். நீங்கள் முன்னேற பல வாய்ப்பு இப்போது கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமான இருக்கும். வீட்டில் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.