முளைவிட்ட பூண்டை சாப்பிடலாமா? பூண்டு ஏன் முளைக்குது தெரியுமா?
Sprouted Garlic : சில சமயங்களில் பூண்டு நிறம் மாறி முளைக்க ஆரம்பிக்கும். அத்தகைய பூண்டை சாப்பிடுவது நல்லதா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
sprouted garlic in tamil
பூண்டு சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது அதன் சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்கு அறியப்படுகிறது. பொதுவாக முளைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று நாம் அறிந்திருப்போம். அது போலவே பூண்டு முளைத்து விட்டால் அதை சாப்பிடலாமா? கூடாதா?என்று கேள்வி நம்மில் பலருக்கு தோன்றும் இந்த கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
What is Sprouted Garlic in tamil
பூண்டு நன்மைகள்:
பூண்டில் வைட்டமின் பி வைட்டமின் சி கால்சியம் போன்றவை அதிகளவில் உள்ளத, இதை நீங்கள் பச்சையாக சாப்பிட்டால் பக்கவாதம், கேன்சர், இதய நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் '2' பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் நீங்குமா?
How to Safely Consume Sprouted Garlic in tamil
பூண்டு முளைப்பது ஏன்?
பூண்டு முளைப்பது இயற்கையானது என்றாலும், சில காரணங்களும் உள்ளன. அவை:
- முதலில் பூண்டை நீண்ட நாள் பயன்படுத்தாமல் அப்படியே இருந்தால் அது முளைக்க ஆரம்பிக்கும் ஏனெனில் சமையலறையில் வெப்பம் சூடாக இருப்பதால் அந்த வெப்பத்தில் அது துளிர்க்க ஆரம்பிக்கும்.
- அதுபோல ஈரப்பதம் காரணமாகவும் பூண்டு முளைக்கும். ஏனெனில் பூண்டு ஈரப்பதத்தை உறிஞ்சும் இதன் விளைவாக பூண்டு முளைக்கும்.
எனவே, பூண்டு முளைப்பதை தடுக்க நீங்கள் அதை ஈரப்பஇல்லாத, குளிர்ந்த இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்து சேமிக்கலாம்.
Sprouted garlic nutrition in tamil
முளைத்த பூண்டை சாப்பிடலாமா?
- முளைத்த பூண்டை சாப்பிட்டால் எந்தவொரு நச்சுத் தன்மையும் ஏற்படாது. ஆனால் நீங்க அதை சமையலில் பயன்படுத்தும் போது உணவின் சுவை சற்று கசப்பு தன்மையில் இருக்கும்.
- முளைத்த பூண்டின் பகுதியை நீக்கிவிட்டு சமையலில் பயன்படுத்தினால் கசப்பு தன்மை ஏற்படாது. தான் சிறந்தது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
இதையும் படிங்க: பூண்டு சமைக்கும்போது செய்யக் கூடாத '8' தவறுகள்.. இதை செய்தால் ஒரு 'சத்து' கூட கிடைக்காது!!!