- Home
- Lifestyle
- பெற்றோரே!! குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய உடனே தூங்க வைக்கிறீங்களா? இந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை
பெற்றோரே!! குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய உடனே தூங்க வைக்கிறீங்களா? இந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை
குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்த பிறகு உடனே தூங்க வைத்தால் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே இது குறித்து பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவேளை குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் சிறிது கவனம் குறைவாக இருந்தால் கூட அது அவர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மேலும் குழந்தைகளை எப்போதுமே ஆரோக்கியத்துடன் வைப்பது பெற்றோர்களின் முதன்மையான கடமை. ஆனால், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பல பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய பிறகு அவர்களை உடனே தூங்க வைப்பார்கள். ஆனால், பெற்றோர்களின் செய்யும் இந்த தவறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மோசமான விரைவில் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் நலமுடன் இருக்க அவர்களின் உணவு பழக்கம் மற்றும் தூக்கம் முறைகள் சரியாக எடுக்க வேண்டும். எனவே குழந்தைகளுக்கு உணவு கொடுத்த பிறகு ஒருபோதும் தூங்க வைக்க கூடாது. அது தவறு. அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் சாப்பிட உடனே ஏன் தூங்க வைக்க கூடாது?
- குழந்தைகள் சாப்பிட்டவுடனே தூங்கினால் உணவு செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் வயிற்று வலி, வாயு பிரச்சனை, அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.
- பெற்றோர்கள் செய்யும் இந்த பழக்கம் தொடர்ந்து நீடித்தால் அது குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சினை மற்றும் தூக்கக் கோளாறுக்கு வழிவகுக்கும்.
- சிறிய வயதிலேயே இந்த பழக்கம் இருந்தால், அவர்கள் வளர்ந்த பிறகும் பெரிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
எப்போது தூங்க வைக்கலாம்?
பொதுவாக சாப்பிட்ட சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு தான் குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்களின் செரிமானத்துக்கும் தூக்கத்திற்கும் ரொம்பவே நல்லது. எனவே, இடைப்பட்ட நேரத்தில் சிறு நடை பயிற்சி, விளையாடுதல், நடனமாடுதல் போன்ற செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.
முக்கிய குறிப்பு
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்குவது பெற்றோரின் கடமை. எனவே உங்கள் குழந்தை சாப்பிட உடனே படுக்க போடாமல் குறைந்தது அரை மணி நேரமாவது அவர்களை ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துங்கள். அதுதான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.