- Home
- Lifestyle
- விரல்ல சொடுக்கு போடும் பழக்கத்தை லேசுல நினைக்காதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்!!
விரல்ல சொடுக்கு போடும் பழக்கத்தை லேசுல நினைக்காதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்!!
Cracking Fingers Health Issues : விரல்களை நெட்டி முறிப்பது அல்லது சொடுக்கு போடும் பழக்கத்தால் உடலுக்கு என்னாகும் என இந்தப் பதிவில் காணலாம்.

விரல்ல சொடுக்கு போடும் பழக்கத்தை லேசுல நினைக்காதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்!!
சிலருக்கு அடிக்கடி கை அல்லது கால் விரல்களில் சொடுக்கு போடுவது வழக்கமாக இருக்கும். இதனை நெட்டி முறிப்பது என்றும் சொல்வார்கள். சிலர் சோம்பலாக இருந்தாலும், டென்சனாக இருந்தாலும் கூட விரல்களை நெட்டி முறிப்பார்கள். இந்த சத்தத்தை கேட்பது ஒருவித திருப்தி அளிக்கும்போலும். ஒருநாளுக்கு நான்கு முதல் 5 முறை கூட பலர் சொடுக்கு போடுகிறார்கள். இதை பெரியவர்கள் செய்வதைக் கண்டு குழந்தைகளும் பழகி கொள்கிறார்கள். பல வீடுகளில் போட்டி போட்டுக் கொண்டு நெட்டி முறிப்பார்கள்.
சொடுக்கு போட்டால் என்னாகும்?
பொதுவாக இப்படி விரல்களில் சொடுக்கு போடுவதால் சோர்வு நீங்குவதாக மக்கள் நினைக்கிறார்கள். இது வெளிப்படையாக உடலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் தொடர்ந்து இந்த பழக்கம் கொண்டிருந்தால் உடலுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. நம் கை விரல்களில் ஒவ்வொரு விரலுக்கும் மூட்டுகள் உள்ளன. சொடுக்கு போடுவதால் அவை பலவீனமடைகின்றன. இதனால் அவற்றின் வடிவமைப்பு மாறும் வாய்ப்புள்ளது.
சொடுக்கு சத்தம் வரக் காரணம்?
நம்முடைய கை, கால்களில் உள்ள மூட்டுகளில் சைனோவியல் திரவம் காணப்படுகிறது. இவை இணைப்புத் திசு போல செயல்படுகிறது. விரல்களில், முழங்கால்கள், முழங்கைகளில் காணப்படும் மூட்டுகளை, எலும்புகளை ஒன்றாக இணைக்கிறது. இந்த திரவம் மூட்டுகளுக்கு இடையே உயவுப் பொருளை போல செயல்படும். இந்த திரவம் தான் மூட்டுகள் உராய்வதைத் தடுக்கிறது. இதில் உள்ள வாயு விரல்களுக்கிடையே வெற்றிடத்தை உருவாக்குகிறது. இதனால் காற்று குமிழி விரல் மூட்டுகளில் உண்டாக காரணமாகிவிடுகிறது. இந்த நேரத்தில் நாம் சொடுக்கு போடும்போது குமிழிகள் உடைந்து சத்தம் கேட்கிறது. இப்படி அடிக்கடி செய்தால் கீல்வாதம் வரலாம். ஏற்கனவே கீல்வாதம் உள்ளவர்கள் விரல்களில் சொடுக்கு போடவே கூடாது.
குழந்தைகளுக்கு பாதிப்பு:
அரிதிலும் அரிதாக ஏதேனும் ஒருமுறை விரல்களை முறிப்பது எந்த பிரச்சனையும் பெரியளவில் ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி செய்வது தவறான செயலாகும். அடிக்கடி சொடுக்குகள் போட்டால் மூட்டுகளில் இருக்கும் மென்மையான திசுக்கள் பலவீனமடைகின்றன. ரொம்ப நாள் சொடுக்கு போட்டால் மூட்டுவலி பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் கட்டாயம் இந்த பழக்கத்தை செய்யக் கூடாது. அவர்களுடைய எலும்புகள் வளர்ச்சியடையும் பருவம் என்பதால் விரல்களின் வடிவம் சீராக இல்லாமல் போகலாம். அதிகமான சொடுக்கு பழக்கம் எலும்பு முறிவை கூட ஏற்படுத்தலாம்.
சொடுக்கு போடும் பழக்கம் இனியும் வேண்டாம்!
வயதாகும்போது எலும்புகள் பலவீனம் அடைவது இயல்புதான். சுமார் 40 முதல் 50 வயதுள்ளவர்கள் கட்டாயம் நடைபயிற்சி போன்ற மிதமான பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிகமான உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. அதுவும் எலும்புகளை பாதிக்கலாம். உங்கள் உடல் எடைக்கு ஏற்றவாறு மிதமான பயிற்சிகளை செய்யலாம்.
என்ன செய்யலாம்?
உங்களுடைய எலும்புகளை உறுதியாக்க கால்சியம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடலாம். 30 வயதை கடந்தவர்கள் வாய்ப்புள்ள போதெல்லாம் எலும்பு அடர்த்தியை சோதித்து அறிந்து கொண்டு தங்களுடைய உணவு பழக்கத்தையும், உடல் செயல்பாடுகளையும் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் பெரிய நோய்களிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.