MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மிகவும் கம்மி விலையில் ஊட்டிக்கு 5 நாட்கள் டூர் போலாம்! IRCTC-ன் அசத்தல் பேக்கேஜ்!

மிகவும் கம்மி விலையில் ஊட்டிக்கு 5 நாட்கள் டூர் போலாம்! IRCTC-ன் அசத்தல் பேக்கேஜ்!

இந்தியாவின் பிரபலமான மலைவாசஸ்தலமான ஊட்டிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சம் ஊட்டி மலை ரயில் பயணம். சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்ல, ஐஆர்சிடிசி சிறப்பு டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Nov 04 2024, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chennai   Ooty Irctc Tour Package

Chennai - Ooty Irctc Tour Package

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி இந்தியாவின் மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகஃ உள்ளது. அழகிய மலைகள், நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் குளிர்ச்சியான காலநிலை, பனிபோர்வை போன்ற புல்வெளிகள் உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர்.

கோடை விடுமுறை மட்டுமின்றி, தொடர் விடுமுறைகள், பண்டிகை காலங்கள் என்றாலே பலரின் நினைவுக்கு வரும் இடங்களில் ஊட்டியும் ஒன்று. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Chennai - Ooty Irctc Tour Package

Chennai - Ooty Irctc Tour Package

கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய மற்றொரு விஷயம் என்றால் அது ஊட்டி மலை ரயில் பயணம். ஊட்டிக்கு செல்பவர்கள் ஒருமுறையாவது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இது கோயம்புத்தூருக்கு வடமேற்கே 86 கிமீ (53 மைல்) தொலைவிலும், மைசூருக்கு தெற்கே 128 கிமீ (80 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும் ஊட்டி உள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்த போது மெட்ராஸ் மாகாணத்தின் கோடைகால தலைநகரமாக ஊட்டி இருந்தது.

60 நாள் ஜாலியா சுத்துங்க.. தாய்லாந்துக்கு விசா தேவையில்லை.. இதை மட்டும் பண்ணுங்க பாஸ்!

35
Chennai - Ooty Irctc Tour Package

Chennai - Ooty Irctc Tour Package

தோடா இன மக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஊட்டி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் வந்தது. ஊட்டியின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, மருந்து தயாரிப்பு மற்றும் போட்டோ மற்றும்  படிப்பிடிப்புகள் ஆகியவை அதிகம் நடைபெறுகிறது.

இந்த நகரம் நீலகிரி காட் சாலைகள் மற்றும் நீலகிரி மலை ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஊட்டியின் இயற்கையான சூழல் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. 2011 இல், நகரத்தின் மக்கள் தொகை 88,430 ஆகும்.

45
Chennai - Ooty Irctc Tour Package

Chennai - Ooty Irctc Tour Package

இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சிறப்பு டூர் பேக்கேஜ்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்ல, ஊட்டி - முதுமலை பேக்கேஜ் என்ற பெயரில் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இந்த ரயில் பயணத்தில் ஊட்டி - முதுமலை - குன்னூர் ஆகிய இடங்களை இந்த சுற்றுலாவில் கண்டுகளிக்கலாம். 

மாலத்தீவை விட அழகான இடம்! அதுவும் கம்மி விலையில்! IRCTC-ன் பெஸ்ட் ஹனிமூன் பேக்கேஜ்!

 

55
IRCTC Chennai - Ooty Tour Package

IRCTC Chennai - Ooty Tour Package

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று இரவு 9.05 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் புறப்படும். இந்த டூர் பேக்கேஜில் பயணிகள் ஸ்லீப்பர் வகுப்பு ரயிலில் அழைத்து செல்லப்படுவார்கள்  விநாயக இன் /ப்ரீத்தி கிளாசிக் ஆகிய ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். 4 இரவுகள்,5 நாட்களை உள்ளடக்கிய இந்த டூர் பேக்கேஜின் விலை ரூ.8,800-ல் இருந்து தொடங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இந்த பேக்கேஜின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved