Fun Facts: ஆட்டோக்களில் ஏன் 3 சக்கரம் இருக்குனு தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது.!
Interesting Facts: ஆட்டோக்களில் நான்கு சக்கரங்களுக்கு பதிலாக ஏன் மூன்று சக்கரங்கள் மட்டுமே இருக்கிறது என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? அதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Why Auto Has 3 Wheels - ஆட்டோக்களில் ஏன் 3 சக்கரம் இருக்கு?
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒன்றாக ஆட்டோக்கள் இருந்து வருகின்றன. சொந்த வாகனம் இல்லாதவர்கள் பொது போக்குவரத்திற்காக ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆட்டோக்கள் பலரின் பொருளாதார நிலையை உயர்த்தும் கருவியாகவும் இருந்து வருகிறது. பலர் வாடகைக்கு ஆட்டோக்களை எடுத்து ஓட்டி அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில் ஆட்டோக்களில் ஏன் மூன்று சக்கரங்கள் மட்டுமே உள்ளது என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? அது குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!
1. குறுகிய சாலைகளில் எளிதாகத் திருப்புதல்
ஆட்டோக்கள் பெரும்பாலும் நெரிசலான சாலைகள் மற்றும் குறுகிய தெருக்களில் பயணிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. மூன்று சக்கரங்கள் இருக்கும் பொழுது அதன் டர்னிங் ரேடியஸ் (திருப்புவதற்கான சுற்றளவு) மிகக் குறைவாக இருக்கும். இதனால் மிகக் குறுகலான சாலைகள் மற்றும் நெருக்கடியான சந்துகளில் கூட ஆட்டோவை எளிதாக யூ டர்ன் செய்யவோ அல்லது திருப்பவோ முடியும். ஆனால் நான்கு சக்கர வாகனங்களால் இத்தகைய நெரிசலில் எளிதாக புகுந்து செல்ல முடியாது.
இதையும் படியுங்கள்: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
2. குறைவான உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவு
நான்கு சக்கர வாகனங்களை ஒப்பிடும் பொழுது மூன்று சக்கர வாகனங்களுக்கான உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைவாகும். ஒரு சக்கரம் குறைவதால் அதன் வடிவமைப்பு, உற்பத்திக்கு தேவைப்படும் உதிரி பாகங்களின் செலவு பெருமளவில் குறைகிறது. மேலும் டயர்கள் மாற்றுவது, பிரேக் சர்வீஸ் போன்ற பராமரிப்பு செலவுகளும் மூன்று சக்கரங்கள் என்பதால் குறைவாகவே இருக்கும். மேலும் மூன்று சக்கரங்கள் மட்டுமே இருப்பதால் ஆட்டோவின் எடை குறைவாக இருக்கும். இது இன்ஜினின் மீதான அழுத்தத்தை குறைத்து எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கும். இது சிறு வணிகர்களுக்கும் தினசரி பயனாளிகளுக்கும் ஒரு மலிவான தேர்வாக அமைகிறது.
இதையும் படியுங்கள்: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
3. அதிக மைலேஜ்
நான்கு சக்கர வாகனங்களை ஒப்பிடும் பொழுது மூன்று சக்கர வாகனங்களின் எடை மிகவும் குறைவாக இருக்கும். வாகனத்தின் எடை குறைவதால் இன்ஜினுக்கு கொடுக்கும் சுமை குறைந்து, அதிக மைலேஜ் கிடைக்கும். இது ஆட்டோ ஓட்டுனர்களின் தினசரி லாபத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். மேலும் ஆட்டோவில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டால் அதன் வேகம் குறைந்து விடும். சிறிய சாலைகளில் இலக்கை விரைவாக சென்றடைய முடியாது. எனவே ஆட்டோகளில் மூன்று சக்கரங்களே பொருத்தப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?
4. சிறந்த எரிபொருள் சிக்கனம்
ஆட்டோக்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் எளிய நுகர்வோரை அல்லது சுயதொழில் செய்பவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. நான்கு சக்கர காரின் விலையை விட ஆட்டோவின் விலை பல மடங்கு குறைவு என்பதால், எளிய மனிதர்களும் எளிதாக கடன் பெற்று இதை வாங்கி விட முடியும். உற்பத்தி மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவையும் ஆட்டோவின் விலையை மலிவானதாக மாறுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் அதிக எரிபொருளை பயன்படுத்துவதோடு போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது. ஆனால் ஆட்டோக்கள் இதை கணிசமாக குறைகிறது.
இதையும் படியுங்கள்: நீண்ட நாட்கள் வட்டமடித்து மரணிக்கும் எறும்புகள்.! வினோத நிகழ்வுக்கான காரணம் என்ன?
5. குறைந்த ஆரம்ப விலை
மூன்று சக்கர வடிவமைப்பு நகர்ப்புற போக்குவரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது. சொகுசை விட குறைந்த செலவில் வேகமாக பயணத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். இருப்பினும் நான்கு சக்கர வாகனங்களைவிட மூன்று சக்கர வாகனங்களில் நிலைத்தன்மை சற்று குறைவாக இருக்கும். அதிக வேகத்தில் திருப்பும் பொழுது கவிழும் அபாயம் இருப்பதால் குறிப்பிட்ட வேக கட்டுப்பாட்டுடன் இயக்கப்பட வேண்டும் என்பதே இதன் ஒரே குறைபாடு. இனி ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுதெல்லாம் அதன் மூன்று சக்கரங்கள் ஒரு சாதாரண வடிவமைப்பு மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

