MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Interesting Facts: துணிகளில் உள்ள XS, XL, XXL என்பதற்கு என்ன அர்த்தம்.? 99% பேருக்கு இது தெரியாது.!

Interesting Facts: துணிகளில் உள்ள XS, XL, XXL என்பதற்கு என்ன அர்த்தம்.? 99% பேருக்கு இது தெரியாது.!

Interesting Facts: நாம் வாங்கும் ஆடைகளில் X, XL, XXL ஆகிய குறியீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இது குறித்து பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை. அது பற்றி இங்கு பார்க்கலாம் வாருங்கள். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 10 2026, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Interesting Facts
Image Credit : stockPhoto

Interesting Facts

முன்பெல்லாம் ஒரு ஆடை வேண்டும் என்றால், அதை துணியாக எடுத்து வந்து டைலரிடம் அளவு கொடுத்து ஆடையாக தைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் நவீன யுகத்தில் பலரும் ரெடிமேடு ஆடைகளையே விரும்புகின்றனர். துணி எடுப்பது, அதை டைலரிடம் கொடுத்து தைப்பது, ஆடை தயாராகும் வரை காத்திருப்பது என்று நேரமும் அலைச்சலும் அதிகமாகும். தற்போதைய காலத்தில் நேராக கடைக்குச் சென்று, சரியான அளவு ரெடிமேட் ஆடையை எடுத்து அதை டிரையல் பார்த்து வாங்கி வருவது தான் இப்போதைய பேஷன். அப்படி ஆடைகள் வாங்கும் பொழுது, XS, L, Xl, XXL போன்ற குறியீடுகள் ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
L, XL, XXL அர்த்தம்
Image Credit : stockPhoto

L, XL, XXL அர்த்தம்

துணிகளில் எழுதப்பட்டிருக்கும் இந்த எழுத்துக்களில் XS என்பது ஸ்மால் என்பதை குறிக்கும். M என்பது மீடியம், l என்பது லார்ஜ் என்பதை குறிக்கும். ஆனால் x என்பது எக்ஸ்ட்ரா என்பதை குறிக்கிறது. XL என்பது எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்பது எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XS என்பது எக்ஸ்ட்ரா ஸ்மால் என்பதையும் குறிக்கிறது. XL அளவிலான சட்டைகள் பொதுவாக 42 முதல் 44 அங்குலம் வரை மார்பளவை கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். XXL அளவிலான ஆடைகள் 44 முதல் 46 அங்குலம் வரை மார்பளவை கொண்டவர்களுக்கு பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்ப சிறிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம்.

இதையும் படியுங்கள்:  Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?

Related Articles

Related image1
Interesting Facts: ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!
Related image2
Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!
35
வேனிட்டி சைஸ்
Image Credit : stockPhoto

வேனிட்டி சைஸ்

பலரும் நினைப்பது போல இந்த அளவுகள் உலகெங்கிலும் உள்ள பிராண்டுகளுக்கு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன. ஒரு கடையில் உங்களுக்கு M அளவு சரியாக இருந்தால் வேறொரு பிராண்ட் கடையில் L அல்லது S அளவு தான் சரியாக இருக்கும். வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த சில பிராண்டுகள் பெரிய அளவிலான துணிகளுக்கு M அல்லது S என்று லேபிள் ஒட்டுவார்கள். இதற்கு வேனிட்டி சைஸ் என்று பெயர்.

இதையும் படியுங்கள்: Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!

45
வெளிநாட்டு பிராண்ட் துணிகளில் அளவு மாறுபடும்
Image Credit : stockPhoto

வெளிநாட்டு பிராண்ட் துணிகளில் அளவு மாறுபடும்

பொதுவாக ஏசியாவில் வாழும் மக்களின் உடல்வாகு சற்று சிறியதாக இருப்பதால் இங்குள்ள L அளவு என்பது அமெரிக்க அல்லது ஐரோப்பிய நாடுகளில் M அல்லது S அளவுக்குத்தான் சமமாக இருக்கும். வெளிநாட்டு பிராண்ட் துணிகளை வாங்கும் பொழுது இந்த அளவுகள் மாறுபடுவதற்கு, இந்த அளவுகள் மாறுபாடும் ஒரு காரணமாகும். துணிகளில் X என்ற எழுத்து அளவுகளில் பெரிதாக செல்லச் செல்ல X எண்ணிக்கை கூடும். (எ.கா - XL, XXL, XXXL) அதேபோல சிறிதாக செல்ல X இன் எண்ணிக்கையும் கூடும். ( எ.கா - XS, XXS)

இதையும் படியுங்கள்: Idli Recipe: இட்லி பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!

55
சைஸ் சார்ட்டைப் பார்த்து வாங்குவது நல்லது
Image Credit : stockPhoto

சைஸ் சார்ட்டைப் பார்த்து வாங்குவது நல்லது

நீங்கள் துணிகளை கடைகளில் வாங்கும் பொழுதோ அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பொழுது S, M, L குறியீடுகளை மட்டும் நம்பாமல் அங்குள்ள சைஸ் சார்ட்டைப் பார்த்து மார்பளவு, இடுப்பளவு, இன்ச் அளவுகளைப் பார்த்து வாங்குவது ஏமாற்றத்தை தவிர்க்கும் சிறந்த வழியாகும். நேராக கடைகளில் சென்று வாங்குபவர்கள் மறக்காமல் ட்ரையல் செய்து பார்த்து வாங்குவது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Cylinder : உங்க கேஸ் சிலிண்டர் 2 மாதம் வரணுமா? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ!
Recommended image2
Vendakkai Kara Kuzhambu: 10 நிமிடத்தில் ஹோட்டல் சுவையில் வெண்டைக்காய் காரக்குழம்பு.! இதோ ரகசிய ரெசிபி.!
Recommended image3
Cooker Biriyani : அரிசி ஒட்டாமல்-குழையாமல் குக்கரில் கச்சிதமாக மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Interesting Facts: ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!
Recommended image2
Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved