- Home
- Lifestyle
- Sofa Cover: வீட்டு அழகை சட்டென மாற்றும் ‘சோஃபா மேஜிக்.. இந்த 5 டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க!
Sofa Cover: வீட்டு அழகை சட்டென மாற்றும் ‘சோஃபா மேஜிக்.. இந்த 5 டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க!
L Shape Sofa Cover: உங்கள் L-ஷேப் சோஃபாவின் தோற்றத்தை எளிதாக மாற்ற, சோஃபா கவர்கள் ஒரு சிறந்த வழியாகும். 5 டிரெண்டிங் கவர் டிசைன்கள் மூலம் உங்கள் லிவிங் ரூமிற்குப் புத்துணர்ச்சியையும், மாடர்ன் லுக்கையும் கொடுக்கலாம்.

L-ஷேப் சோஃபா கவர்
வீட்டின் இதயம் என்று சொல்லப்படும் லிவிங் ரூமை அழகாக்குவதில் சோஃபாக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக உங்களிடம் L-ஷேப் சோஃபா இருந்தால், அதிக செலவே இல்லாமல் ஒரு 'கவர்' மூலமாகவே அந்த இடத்தின் தோற்றத்தையே மாற்றிவிட முடியும். சோஃபாவைப் பாதுகாப்பதோடு, வீட்டிற்கு மாடர்ன் லுக் தரும் 5 டிரெண்டிங் கவர் டிசைன்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

மினிமல் சாலிட் கலர் கவர்
அமைதியான மற்றும் நேர்த்தியான சூழலை விரும்புபவர்களுக்கு 'சாலிட் கலர்' கவர்களே மிகச்சிறந்த தேர்வு. கிரே (Grey), பீஜ் (Beige) அல்லது க்ரீம் போன்ற நிறங்கள் உங்கள் அறையை இன்னும் விசாலமாகவும், கண்ணியமாகவும் காட்டும். இது எந்த விதமான பெயிண்ட் நிறத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
ஜியோமெட்ரிக் பிரிண்ட் கவர்
உங்கள் லிவிங் ரூம் கொஞ்சம் 'துறுதுறு'வென மாடர்னாக இருக்க வேண்டும் என நினைத்தால், ஜியோமெட்ரிக் (Geometric) டிசைன்களைத் தேர்வு செய்யுங்கள். கோடுகள் மற்றும் முக்கோண வடிவங்கள் கொண்ட இந்த பேட்டர்ன்கள், சிம்பிளான அறையைக்கூட ஒரு டிசைனர் வீடு போல மாற்றிக் காட்டும்.
ஃப்ளோரல் எஸ்தெடிக் கவர்
வீட்டிற்குள் நுழையும்போதே ஒரு புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்பவர்கள் பூக்கள் (Floral) நிறைந்த டிசைன்களைத் தேர்ந்தெடுக்கலாம். மென்மையான வண்ணங்களில் லேசான பூக்கள் கொண்ட பிரிண்ட்கள், லிவிங் ரூமில் ஒரு ரிலாக்ஸான சூழலை உருவாக்கும்.
வெல்வெட் அல்லது டெக்ஸ்சர்டு கவர்
வீடு பார்க்க பிரம்மாண்டமாக (Luxury Look) இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால், வெல்வெட் அல்லது டெக்ஸ்சர்டு (Textured) கவர்களைத் தேர்வு செய்யுங்கள். நேவி ப்ளூ, மெரூன் அல்லது எமரால்டு கிரீன் போன்ற அடர் நிற வெல்வெட் கவர்கள், உங்கள் சோஃபாவிற்கு ஒரு ராஜ தோரணையைத் தரும்.
ஸ்டேச்சபிள் ஃபிட்டட் கவர்'
சோஃபா கவர் அடிக்கடி நழுவி விடுகிறது என்ற கவலை இனி வேண்டாம். ஸ்டேச்சபிள் (Stretchable) கவர்கள் சோஃபாவின் வடிவத்தோடு கச்சிதமாக ஒட்டிக்கொள்ளும். இது பார்ப்பதற்கு நீட்டாகவும், தூசி மற்றும் கறைகளில் இருந்து சோஃபாவை முழுமையாகப் பாதுகாக்கவும் உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

