MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Water Heater Buying Tips: புதிய வாட்டர் ஹீட்டர் வாங்கப்போறீங்களா? உங்கள் குடும்பத்திற்கு எது பெஸ்ட்? இந்த 6 விஷயங்களை செக் பண்ணுங்க!

Water Heater Buying Tips: புதிய வாட்டர் ஹீட்டர் வாங்கப்போறீங்களா? உங்கள் குடும்பத்திற்கு எது பெஸ்ட்? இந்த 6 விஷயங்களை செக் பண்ணுங்க!

Water Heater: வாட்டர் ஹீட்டர் வாங்கும் போது, உங்கள் குடும்பத்தின் அளவு, மின்சாரச் சிக்கனம், மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்வது அவசியம். உங்கள் பகுதியின் தண்ணீர் தரம், பராமரிப்பு வாரண்டி போன்றவையும் சரியான கீசரைத் தேர்ந்தெடுக்கவும்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 09 2026, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வாட்டர் ஹீட்டர்
Image Credit : Gemini

வாட்டர் ஹீட்டர்

மழைக்காலமும் குளிர்காலமும் வந்துவிட்டாலே பலரது தேடல் 'வாட்டர் ஹீட்டர்' (கீசர்) பக்கம் திரும்பும். சந்தையில் பல பிராண்டுகள் இருந்தாலும், உங்கள் வீட்டிற்கு எது செட் ஆகும்? எதை வாங்கினால் மின்சார பில் குறையும்? மற்றும் உற்பத்தியாளரின் உத்தரவாதம் மற்றும் இருப்பிடம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மின்சார பயன்பாடு போன்ற பிற முக்கியமான அம்சங்களையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே வாட்டர் ஹீட்டர் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
குடும்பத்தின் அளவு மற்றும் கொள்ளளவு
Image Credit : Gemini AI

குடும்பத்தின் அளவு மற்றும் கொள்ளளவு

உங்களுக்கு எவ்வளவு சூடான தண்ணீர் தேவை என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். அதாவது 2 அல்லது 3 நபர்கள் இருந்தால் 10 முதல் 15 லிட்டர் கொள்ளளவு போதுமானது. நீங்கள் ஒரு பெரிய குடும்பமாக இருந்தால் 25 லிட்டர் அல்லது அதற்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட ஹீட்டர்களைத் தேர்ந்தெடுக்கவும். வாட்டர் ஹீட்டர் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. பொதுவாக உருளை அல்லது சதுர வடிவில் அதிகமாக வருகின்றனர். உடனுக்குடன் சுடுதண்ணீர் கிடைக்க 'இன்ஸ்டன்ட் ஹீட்டர்' (3-5 லிட்டர்) சிறந்தது. 

Related Articles

Related image1
Bori Planter: பழைய சாக்கு இனி அழகான பூந்தொட்டி! உங்கள் வீட்டுத் தோட்டத்தை மாற்றப்போகும் 5 மேஜிக் ஐடியாக்கள்!
Related image2
Tomato Storage Tips: இனி தக்காளி விலை ஏறினாலும் டென்ஷன் வேண்டாம்! 4 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க இதோ 4 ஸ்மார்ட் வழிகள்!
36
மின்சாரச் சிக்கனம்
Image Credit : Pinterest\ gemini

மின்சாரச் சிக்கனம்

வாட்டர் ஹீட்டர்கள் அதிக மின்சாரத்தை நுகரும் என்பதால், குறைந்தபட்சம் 4-ஸ்டார் அல்லது 5-ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்களை மட்டுமே வாங்குங்கள். இது ஆரம்பத்தில் சற்று விலை கூடுதலாக தெரிந்தாலும், உங்கள் மாத மின்சார பில்லைப் பாதியாகக் குறைக்க உதவும்.

46
பாதுகாப்பு அம்சங்கள்
Image Credit : Gemini

பாதுகாப்பு அம்சங்கள்

மின்சாரம் மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட சாதனம் என்பதால் பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடாது. தரமான மற்றும் பரிசோதிக்கப்பட்ட ISI முத்திரை கொண்ட பிராண்டுகளை மட்டும் தேர்வு செய்யுங்கள். தண்ணீர் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சுவிட்ச் தானாக ஆஃப் ஆகும் வசதி அவசியம். அதிகப்படியான அழுத்தத்தைக் குறைக்க பிரஷர் ரிலீஸ் வால்வுகள் இருக்க வேண்டும்.

56
தண்ணீரின் தரம்
Image Credit : our own

தண்ணீரின் தரம்

உங்கள் பகுதியில் உள்ள நீரின் தரம் உங்கள் வாட்டர் ஹீட்டரின் ஆயுளைப் பாதிக்கலாம். உவர் நீர் போன்றவைகள் இருந்தால் சாதாரண ஹீட்டர்கள் சீக்கிரம் துருப்பிடித்துவிடும். கடின நீர் (அதிக கால்சியம் மற்றும் மெக்னீசியம் செறிவுகள்) உள்ள பகுதிகளுக்கு, அரிப்பை எதிர்க்கும் நீர் தொட்டிகளைக் கொண்ட சாதனங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உட்புறத் தொட்டி மற்றும் கிளாஸ் லைன் கோட்டிங் கொண்ட ஹீட்டர்களைத் தேர்வு செய்வது அதன் ஆயுளை நீட்டிக்கும்.

66
பராமரிப்பு மற்றும் வாரண்டி
Image Credit : Getty

பராமரிப்பு மற்றும் வாரண்டி

ஸ்மார்ட் அம்சங்கள்

பட்ஜெட் கொஞ்சம் அதிகமாக இருந்தால், நவீன அம்சங்களைக் கொண்டவைகளை வாங்கலாம். டிஜிட்டல் டிஸ்ப்ளே தண்ணீரின் வெப்பநிலையைத் துல்லியமாக அறிய உதவும். வைஃபை (Wi-Fi) மூலம் மொபைல் ஆப் அல்லது அலெக்சா வழியாக ஆன்/ஆஃப் செய்யும் வசதி.

பராமரிப்பு மற்றும் வாரண்டி (Maintenance)

வாங்குவதற்கு முன் அந்த பிராண்டின் வாரண்டி காலம் மற்றும் உங்கள் பகுதியில் அதற்கான சர்வீஸ் சென்டர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முறையாகப் பராமரிப்பதன் மூலம் விபத்துகளைத் தவிர்த்து நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kitchen Tips: வாழைக்காய் கரை கையில் ஒட்டாமல் நறுக்குவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
Recommended image2
சின்ன கிஃப்ட் தான்.. ஆனா பெரிய லவ்! ரூ.1000க்குள் ரொமான்டிக் கிஃப்ட்ஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
காஸ் சிலிண்டர் அதிக நாட்கள் வருவதற்கு என்ன செய்யலாம்? அசத்தலாக 6 கிச்சன் டிப்ஸ்
Related Stories
Recommended image1
Bori Planter: பழைய சாக்கு இனி அழகான பூந்தொட்டி! உங்கள் வீட்டுத் தோட்டத்தை மாற்றப்போகும் 5 மேஜிக் ஐடியாக்கள்!
Recommended image2
Tomato Storage Tips: இனி தக்காளி விலை ஏறினாலும் டென்ஷன் வேண்டாம்! 4 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க இதோ 4 ஸ்மார்ட் வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved