எது நல்லது? வெறும் நெல்லிக்காயா? தேனில் ஊறவைத்ததா?
Amla And Honey Benefits : வெறும் நெல்லிக்காயை சாப்பிடுவதை விட தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கிய நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கும்.
Amla And Honey Benefits In Tamil
இன்று நாம் அனைவருடைய வாழ்க்கையும் பிறர் முகம் பார்த்து நின்று கூட பேச முடியாத அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கிறது. காலங்கள் மாற மாற நம்முடைய வாழ்க்கை முறையும் அதற்கு ஏற்ற போல் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாழ்க்கை முறையால் உடல் ஆரோக்கியமாக இருக்குமா? என்றால் கண்டிப்பாக இல்லை.
ஆம், இந்த நவீன வாழ்க்கை முறையால் நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் என அனைத்தும் மோசமானது தான் மிச்சம். இதனால் பலரும் பல விதமான உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். தீராத நோய்கள் பலருக்கும் உண்டு. தற்காலிகமாக நோயால் அவதிப்படுபவர்களும் உண்டு. ஆனால், நல்ல வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் எந்தவித நோய் நொடியுமின்றி நாம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
Amla And Honey Benefits In Tamil
அந்த வகையில், நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் பல நன்மைகளைப் பற்றி நீங்கள் நிறையவே கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் அதன் நன்மைகளை நாம் இரட்டிப்பாக பெற முடியும் தெரியுமா? நெல்லிக்காய் புளிப்பான சுவையில் இருப்பதால், அதை தித்திக்கும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக, தினமும் காலை ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சுலபமாக தடுக்க முடியும். கடைகளில் கூட தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் விற்கப்படுகிறது. ஆனால், அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே, இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். ஆகவே, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் அதை தயாரிக்கும் முறை பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
Amla And Honey Benefits In Tamil
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
செரிமான பிரச்சனைக்கு நல்லது : நீங்கள் செரிமான பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உணவு எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டுக்கு நல்லது : நீங்கள் சளி இருமல் அல்லது தொண்டை கட்டு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயில் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினையில் இருந்து சீக்கிரமாகவே விடுபடுவீர்கள்.
ஆஸ்துமாக்கு நல்லது : ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். ஏனெனில், இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டாக்ஸின்கள் உள்ளன.
இதையும் படிங்க: தேனை மறந்தும் கூட இதனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. அபாயம்!!
Amla And Honey Benefits In Tamil
மலட்டுத்தன்மைக்கு நல்லது : ஆண் பெண் என இருவரும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை சுலபமாக தடுக்க முடியும். இது தவிர, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்கும் மற்றும் மாதவிடாய் ஒழுங்காக வரும்.
இளமையாக வைக்க உதவும் : நீங்கள் என்றும் இளமையாக இருக்க விரும்பினால், தினமும் காலை தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உங்களது முதுமை தடுக்கப்பட்டு என்றும் இளமையாக இருப்பீர்கள். இது தவிர, இது உடலுக்கு உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்கும், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் முதுமை கோடுகளை நீக்கும்.
நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் : உங்கள் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற விரும்பினால் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடலில் குவிந்து இருக்கும் நச்சுக்கள்
முழுமையாக வெளியேறிவிடும்.
Amla And Honey Benefits In Tamil
அல்சருக்கு நல்லது : உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருந்தால் தினமும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வாருங்கள். அதுவும் குறிப்பாக வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்டு ஒரு மணி நேரம் வரை எதையும் சாப்பிடக்கூடாது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.
இரத்த சோகைக்கு நல்லது : உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வாருங்கள். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், ரத்த சோகை வராமல் தடுக்கப்படும் மற்றும் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் 'நெல்லிக்காய் ஜூஸ்' குடிங்க.. ஆரோக்கியத்திற்கு ஒன்றல்ல பல நன்மைகள் கிடைக்கும்!
Amla And Honey Benefits In Tamil
கொலஸ்ட்ராலை குறைக்கும் : கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் அவதிப்படுறீங்களா? அதற்கான தீர்வு தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் தான். ஆம், தினமும் காலை வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் வைட்டமின் சி உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பிக்கும்
கல்லீரலுக்கு நல்லது : தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை ஒரேடியாக நீக்கி கல்லீரல் சிறப்பாக செயல்பட பெரிதும் உதவுகிறது. இதனால் கல்லீரல் எப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும்.
தேன் நெல்லிக்காய் தயாரிக்கும் முறை :
கொட்டை இல்லாமல் நெல்லிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதியவு தேன் நிரப்பி பிறகு அதில் நறுக்கிய நெல்லிக்காயை போட்டு மூடி வையுங்கள். சில நாட்கள் கழித்து பார்த்தால் நெல்லிக்காய் தேனில் நன்றாக ஊறி போயிருக்கும்.