தேனை மறந்தும் கூட இதனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. அபாயம்!!
Worst Foods Combinations With Honey : தேனுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
தேன் ஒரு சிறந்த ஆயுர்வேதம் மருந்து இது பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வைட்டமின் ஏ, பி, சி, சோடியம், பாஸ்பரஸ், அயோடின், இரும்பு, கால்சியம், தாமிரம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளமான களஞ்சியம் ஆகும்.
ஆனால் சில பொருட்கள் உடன் தேன் சேர்த்து சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? எனவே எந்தெந்த பொருட்களுடன் தேன் வைத்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
முள்ளங்கி: தேன் மற்றும் முள்ளங்கியை சேர்த்து ஒருபோதும் சாப்பிடாதீர்கள். சுமார் ஒரு மணி நேரம் இடைவெளிக்கு பிறகு கூட சாப்பிடலாம். உண்மையில், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் அது உடலில் நச்சுக்களை உருவாக்கும். இதன் காரணமாக உடல் உறுப்புகள் சேதம் அடையும் அபாயம் அதிகரிக்கும்.
மீன்: அசைவ உணவுகளுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக தேனுடன் மீன் அல்லது இறைச்சியுடன் தேனை சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனால் வயிற்றுப் பிடிப்புகள், வலிகள் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரை: தேனில் ஏற்கனவே இனிப்பு இருக்கும், அதை சர்க்கரை உடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் குறிப்பிட்டுத்தக்க சர்க்கரை அளவுகளை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவு அபாயம் அதிகரிக்கும். சர்க்கரையை போலவே தேனிலும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே,தேனை ஒருபோதும் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்.
நெய்: சிலர் தேனுடன் நெய்யையும் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் தேனையும் நெய்யையும் ஒன்றாக சாப்பிட்டால், உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். இதனால் சுவாச கோளாறுகள் புற்றுநோய் கூட வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: தேனை வச்சி இந்த 6 ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. உங்க முகம் தங்கம் போல ஜொலிக்கும்!!
தயிர்: தேனுடன் தயிர் இணைத்து சாப்பிடுவது நல்லதல்ல. தேன் மற்றும் தயிரில் இருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, பல செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: Weight Loss with Honey : தேனுடன் இதை சேர்த்து குடித்தால் போதும், உடல் எடையை குறைக்கலாம்..