காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு விதை சாப்பிட்டு வந்தால்.. 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும்
omam benefits in tamil: ஓம விதைகளை உண்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை காணலாம்.
வீட்டு சமையலறை பொருள்கள் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கின்றன. நாள்தோறும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சை ஓம விதைகளை உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். இந்த ஓமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. வீட்டு பெரியோர் ஓமம் மார்பு சளியை நீக்கும் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். நாங்கள் ஓம விதைகளை குறித்து முழுதகவல்களையும் உங்களுக்கு சொல்கிறோம்.
உடல் வலுப்பெற..!
ஓமத்தை (Ajwin) தண்ணீரில் கொதிக்கவிட்டு அதனுடன் கருப்பட்டி கலந்து காலையில் பருகினால் உடல் வலுப்பெறும். உடலில் ஆற்றல் இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஓம வாட்டரை அருந்தினால் உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
தலை வலி நீங்க..!
தலை வலி அவஸ்தை இருந்தால் ஒரு தேக்கரண்டி ஓமத்தை அரை லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரை வடிகட்டி, தினமும் 2 அல்லது 3 முறை தொடர்ந்து அருந்துவது நல்லது. ஓமம் விதைகளை சாப்பிடுவது மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா ஆகிய சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
அசிடிட்டி நீங்க..!
ஓம விதைகளை வைத்து அமிலத்தன்மை, அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை நீக்கலாம். ஓமம் விதைகளில் இருக்கும் நொதிகள் செரிமானத்தை துரிதப்படுத்தும். வயிறு உப்புசம், வாயு, துர்நாற்றம் ஆகிய பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க டிப்ஸ்
எளிமையாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், நாள்தோறும் உணவில் ஓமம் விதைகளை சேர்க்கலாம். ஓம தண்ணீரை அதிகமாக குடிப்பதால் எடையை கணிசமாக குறைக்கலாம்.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங்.. வெறும் 5 நிமிடம் செய்வதால் இவ்ளோ நன்மை இருக்கா?
சரும பராமரிப்பில் ஓமம்..!
உங்களுக்கு முகப்பரு பிரச்சனை இருந்தால், கொஞ்சம் ஓமத்தை தூளாக்கி தயிருடன் கலந்து முகத்தில் பூசுங்கள். இந்த பேஸ்ட் உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவுங்கள். முகப்பரு மறையும்.
இதையும் படிங்க: உங்க நாக்கின் வடிவம் நிறம் இப்படி இருந்தால் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. சாமுந்திரிகா லட்சணம் சொல்வது என்ன?