- Home
- Lifestyle
- Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!
Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!
Tips for Defrosting Freezer : உண்மையில், ஃப்ரீசரில் ஏன் பனி பாறைகள் குவிந்து கிடக்கிறது? அதை நீக்குவதற்கான வழி என்ன போன்ற விவரங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.

பிரிட்ஜ் சரியாக பராமரிப்பது இல்லை
இன்றைய காலகட்டத்தில் பிரிட்ஜ் நம் அனைவரது வீடுகளிலும் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவரது சமையலறையிலும் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சமைத்த உணவுகள், பால், முட்டை போன்றவற்றை எளிதில் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை நீண்ட நாட்களுக்கு அழுகாமல், ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் அனைவரும் பிரிட்ஜ் பயன்படுத்தினாலும் அதன் பராமரிப்பில் பலரும் அதிக கவனம் செலுத்துவதில்லை.
ஃப்ரீசரில் ஐஸ் கட்டி உருவாவது எப்படி?
குறிப்பாக பிரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் குளிர்விக்க எவ்வளவு நேரம் ஆகிறது? என்ற கேள்விக்கு பலரால் பதில் சொல்ல முடியாமல் போகலாம். ஆனால், சமீபகாலமாக வரும் அட்வான்ஸ்டு மாடல் குளிர்சாதனப் பெட்டிகளில் ஆட்டோ டிஃப்ராஸ்ட் ஆப்ஷன் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் பழைய மாடல் குளிர்சாதன பெட்டிகளில் இது இல்லை. இதனால் பிரீசரில் பணி கட்டிகள் கட்ட ஆரம்பிக்கிறது. உண்மையில், ஃப்ரீசரில் ஏன் பனி பாறைகள் உருவாகின்றன? அதை நீக்குவதற்கான வழி என்ன போன்ற விவரங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.
கதவு ரப்பர் பழுதடைதல்
பெரும்பாலான வீடுகளில் ஒற்றை கதவு கொண்ட பிரிட்ஜ் தான் அதிகவில் பார்த்து இருக்கிறேம். இந்த மாடலில் பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதாவது, ஃப்ரீசரில் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் ஃப்ரீசரில் மலை போல் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கும். இதற்குக் காரணம் பிரிட்ஜ் கதவு பழுதடையும் போது, அதாவது ரப்பர் கெட்டுப்போய் வெளிக்காட்டி உள்ளே வரும்போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
நீர் வடிகட்டி கோளாறு
ஃப்ரீசரில் பனி கட்டிய பிறகு ஃப்ரிட்ஜ் குளிரூட்டும் திறன் குறைகிறது. மற்றும் அதிக நேரம் இருக்கிறது இதன் காரணமாக மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உணவுப் பொருட்களை சரியாக குளிர்ச்சியாக வைத்திருக்க முடியாது. அதுபோல் தண்ணீரை சுத்தம் செய்யும் நீர் வடிகட்டி சரியாக வேலை செய்யவில்லை என்றால் பனிப்பாறை உருவாகும். இது உங்கள் குளிர்சாதனை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களையும் முறைய வைக்கும் எனவே தண்ணீர் வடிகட்டியை மாற்றுவது தீர்வு.
தண்ணீர் வெளியேறும் குழாயில் அடைப்பு
மேலும் பிரிட்ஜில் ஒரு குழாய் உள்ளது அது கீழே இருந்து தண்ணீரை வெளியேற்றும். இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஃப்ரிட்ஜில் ஐஸ் கட்டி உறையத் தொடங்கும். எனவே குழாயை அடிக்கடி சுத்தம் செய்து அழுக்குகளை கழுவ சோப்பை பயன்படுத்தவும். குழாயில் ஏதாவது சிக்கினால் அதை உடனே வெளியே இழுக்க ஒரு சரத்தை பயன்படுத்தலாம்.
பின்புறச் சுருள்கள் அழுக்கடைதல்
ஃப்ரிட்ஜின் பின்புறம் குளிர்ச்சியாக இருக்க உதவும் சுருள்கள் உள்ளன. இந்த சுருள் அழுக்காகினாலோ அல்லது பனியால் மூடப்பட்டாலும் பிரிட்ஜ் சரியாக வேலை செய்யாது. மேலும் உங்கள் பிரிட்ஜ் அதிக பணி குவிந்து கொண்டே இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
