பருப்பில் பூச்சிகள் வராமல் நீண்டகாலம் சேமிக்க சூப்பர் டிப்ஸ்!!
Pulses Storage Tips : பருப்பில் பூச்சிகள் வராமல், கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷாக இருக்க சேமிப்பது எப்படி என்று இங்கு காணலாம்.

பருப்பில் பூச்சிகள் வராமல் நீண்டகாலம் சேமிக்க சூப்பர் டிப்ஸ்!!
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் கண்டிப்பாக இருக்கும். இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் இவற்றைக் கொண்டு பலவிதமான உணவுகளை சமைக்கலாம். ஆனால், இல்லத்தரசிகளுக்கு பருப்புகளை எப்படி சரியாக சேமிக்க வேண்டும் என்று தெரிவதில்லை. இவற்றை முறையாக சேமிக்காவிட்டால் அவை கெட்டுப்போக வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி அவற்றின் சுவையும், அதன் தரமும் மோசமாகும். சில சமயங்களில் பூச்சிகள், வண்டுகள் கூட வர ஆரம்பிக்கும். இதனால் அவை அவற்றின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இழக்கின்றன. எனவே இந்த பதிவில் பருப்புகளை வண்டு பூச்சிகள் வராமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க எப்படி சேமிக்க வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
காற்று புகாத டப்பாக்களில் சேமிக்கலாம்:
பருப்புகள் நீண்ட காலம் பிரஷ்ஷாக இருக்க அதை சேமிப்பதற்கான சிறந்த வழி எதுவென்றால், அவற்றை காற்று புகாத டப்பாக்களில் தான் சேமிக்க வேண்டும். பருப்புகள் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சுவதால் அவற்றை காற்று போகாத டப்பாக்கத்தில் சேமித்து வைத்தால் ஈரப்பதம் உள்ளே நுழைவது தடுக்கப்படும் மற்றும் அவை புதிதாக இருக்கும். இதற்கு நீங்கள் கண்ணாடி ஜாடி, பிளாஸ்டிக் டப்பா அல்லது இறுக்கமான மூடிகளுடன் கூடிய உலோக கேன்களை பயன்படுத்தலாம். அவற்றில் பருப்புகளை வைத்து சேமிக்கலாம். முக்கியமாக காற்று முடியாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும்.
குளிர்ந்த இடத்தில் சேமிக்கலாம்:
வெப்பத்திலிருந்து பருப்புகளை பாதுகாப்பது ரொம்பவே முக்கியம். எனவே அவற்றை நேரடி சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலகி குளிர்ந்த மற்றும் குளிர்ந்த இடத்தில் வைத்து சேமிக்கலாம். வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் பருப்புகளை விரிவாக கெட்டுப் போக வைக்கும் மற்றும் பூச்சிகள், வண்டுகள் வந்துவிடும். எனவே அடுப்புகள், ஜன்னல்கள் அருகில் பருப்புகளை போட்டு வைத்திருக்கும் டப்பாக்களை வைக்க வேண்டாம்.
ஜிப் லாக் பை:
பல மாதங்கள் ஆனாலும் பருப்புகள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை ஜிப் லாக் பையில் வைத்து சேமிக்கலாம். இந்த பைக் காற்றை வெளியேற்றுகின்றன. மேலும் பருப்புகள் கெட்டுப் போவதை தடுப்பது மட்டுமல்லாமல், அவை நீண்ட காலம் நீடிக்கவும் உதவுகிறது. இந்த முறையில் சேமிக்கும் பருப்புகள் ஒரு வருடம் ஆனாலும் அதன் ஊட்டச்சத்துக்களை இழக்காமல் அப்படியே இருக்கும்.
இதையும் படிங்க: ஓட்ஸை இப்படி சேமிங்க; கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்!!
பூண்டு:
பருப்புகளில் பூச்சிகள் வராமல் இருக்க சில பூண்டு பற்களை பருப்புகள் வைத்திருக்கும் டப்பாக்களில் போடவும். பூண்டு பூச்சிகளிடமிருந்து பருப்புகளை பாதுகாக்க உதவுகிறது. பூண்டு உலர்ந்து விட்டால் அவற்றை அகற்றிவொட்டுய் புதியவற்றை போடவும் இதனால் உங்களது பருப்பு நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
இதையும் படிங்க: பச்சை மிளகாய் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!!
பிரியாணி இலை:
பிரியாணியில் இயற்கையான பூச்சி விரட்டி ஆகும் எனவே இதை பருப்புகள் வைத்திருக்கும் டப்பாக்களில் பொட்டு வைத்தால் பூச்சிகள் வண்டுகள் வருவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி பருப்புகள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.