- Home
- Lifestyle
- Parenting Tips: குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறாங்களா? லைட்டா எடுத்துக்காதீங்க! பின்னணியில் உளவியல் பிரச்சனை இருக்கு.!
Parenting Tips: குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறாங்களா? லைட்டா எடுத்துக்காதீங்க! பின்னணியில் உளவியல் பிரச்சனை இருக்கு.!
How to Stop Kids From Using Bad Words? : சின்ன குழந்தைங்க பெரியவங்கள பார்த்து பேசுறது சகஜம். ஆனா, சில சமயம் அர்த்தம் தெரியாம கெட்ட வார்த்தை பேசும்போது, நாம சிரிச்சு விட்டுடுறோம். இந்த சின்ன தப்பு, அவங்க நடத்தையை எப்படி பாதிக்கும்னு தெரியுமா?

குழந்தைகள் கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார்களா?
குழந்தைகள் சின்ன வயசுல பெரியவங்கள பார்த்து புது வார்த்தைகளை கத்துக்கிறது இயல்பு. ஆனா, அவங்க கெட்ட வார்த்தை பேசும்போது நாம சிரிச்சா, அது அவங்களோட எதிர்கால நடத்தையை மோசமா பாதிக்கும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க.
பெரியவர்கள் சிரிக்கக்கூடாது
உளவியல் படி, குழந்தைகள் ஒரு வார்த்தை பேசும்போது பெரியவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்களோ, அதை வெச்சுதான் அந்த பழக்கத்தை தொடர்வாங்க. கெட்ட வார்த்தைக்கு நாம சிரிச்சா, 'இது ஜாலியா இருக்கு, திரும்ப சொன்னா எல்லாரும் சிரிப்பாங்க'னு நினைச்சுக்குவாங்க. இதுவே அவங்களுக்கு பழக்கமாயிடும்.
அமைதியாக சரி செய்யுங்கள்
குழந்தைகள் பேசுறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சா, அதையே திரும்பத் திரும்ப செய்வாங்க. கெட்ட வார்த்தை பேசும்போது நாம கோபப்பட்டாலும், சிரிச்சாலும் அது அவங்களுக்கு ஒரு ஊக்கம்தான். அதனால ஓவரா ரியாக்ட் பண்ணாம, அமைதியா அதை சரிசெய்யணும்.
குழந்தைகளை கவனியுங்கள்
குழந்தைகள் கெட்ட வார்த்தை கத்துக்க முக்கிய காரணம் அவங்க சுத்தி இருக்கிறவங்கதான். வீட்ல பெரியவங்க பேசுறது, நண்பர்கள், டிவி, மொபைல் போன் எல்லாமே ஒரு காரணம். குழந்தைங்க என்ன பாக்குறாங்க, யார்கூட பழகுறாங்கன்னு பெத்தவங்க கவனிக்கிறது ரொம்ப முக்கியம்.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்
சின்ன வயசுலேயே கெட்ட வார்த்தை பேசிப் பழகிட்டா, ஸ்கூல், வெளியிலனு எல்லா இடத்துலயும் அதையே பயன்படுத்துவாங்க. இதனால அவங்க நட்பு பாதிக்கப்படலாம், டீச்சர்ஸ்கிட்ட பிரச்சினை வரலாம். கோபத்தை காட்ட கெட்ட வார்த்தை பேசுறது அவங்க குணமாவே மாறிடும்.
சுலபமாக மாற்றலாம்
இதை தவிர்க்க, முதல்ல பெத்தவங்க குழந்தைங்க முன்னாடி நல்ல வார்த்தைகளை பேசணும். குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசினா, 'இப்படி பேசினா மத்தவங்க மனசு கஷ்டப்படும்'னு மென்மையா புரியவைங்க. அவங்ககிட்ட வெளிப்படையா பேசுங்க. எங்கிருந்து கத்துக்கிட்டாங்கனு தெரிஞ்சுகிட்டா, பிரச்சனையை சுலபமா சரிசெய்யலாம். நல்லா பேசும்போது பாராட்டுங்க. அப்போதான் அவங்க பொறுப்பானவங்களா வளர்வாங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

