MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Waste to Wealth: பழைய பாட்டில், கிழிந்த துணியில் பணம் சம்பாதிக்கலாம்! வேஸ்ட் பொருளில் இருந்து சூப்பர் பிசினஸ் ஐடியாஸ்.!

Waste to Wealth: பழைய பாட்டில், கிழிந்த துணியில் பணம் சம்பாதிக்கலாம்! வேஸ்ட் பொருளில் இருந்து சூப்பர் பிசினஸ் ஐடியாஸ்.!

How to Make Money From Waste Material at Home : வீட்ல பழைய பாட்டில், கிழிஞ்ச துணி, நியூஸ் பேப்பர்னு நாம தூக்கிப் போடுற இந்த வேஸ்ட் பொருட்களை வெச்சே மாசம் ₹15,000 வரைக்கும் சம்பாதிக்க முடியும். இந்த பிசினஸை எப்படி ஆரம்பிக்கிறதுனு பார்க்கலாம் வாங்க. 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 16 2026, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கண்ணாடி பாட்டில்கள்
Image Credit : AI Generated

கண்ணாடி பாட்டில்கள்

தக்காளி சாஸ், ஜாம், கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் வீட்டுல இருந்தா அதை தூக்கி போடீதீங்க. பாட்டில்களை நல்லா கழுவி சுத்தம் பண்ணி காய வைங்க. அப்புறம் அது மேல அக்ரிலிக் பெயின்ட் அடிங்க. பூ, மனிதர்கள் அல்லது விலங்குகளில் உருவங்களை வரையுங்க. அந்த பாட்டிலுக்குள்ள 'ஃபேரி லைட்ஸ்' போட்டா போதும். ஒரு பாட்டிலுக்கு ₹20-30 செலவாகும், ஆனா ₹200 முதல் ₹500 வரை விற்கலாம். இரவு நேர விளக்குகளாகவும் பயன்படுத்தலாம்.

27
பழைய பட்டுப் புடவைகள்
Image Credit : AI Generated

பழைய பட்டுப் புடவைகள்

பழைய பட்டுப் புடவைகளை பெரும்பாலும் கடைகளில் விற்போம். ஆனா ஒரு புடவைக்கு சொற்ப காசு தான் கிடைக்கும். இப்படி செய்யாம இந்த புடவைகளை வைத்து குஷன் கவர்கள் செய்யலாம். சோபாக்களை அலங்கரிக்கலாம். கிழிந்த துணிகளை வெட்டி, பின்னி அழகான மிதியடிகளை உருவாக்கலாம். பழைய துணிகளுக்கு புது லுக் கொடுக்க மக்கள் நல்ல பணம் தருவார்கள்.

Related Articles

Related image1
Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Related image2
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
37
பழைய செய்தித்தாள்கள்
Image Credit : AI Generated

பழைய செய்தித்தாள்கள்

செய்தித்தாள்கள் அதிகமாக இருந்தா அதை சுருட்டி, குச்சிகளாக மாற்றி கூடை, பென் ஹோல்டர், போட்டோ ஃபிரேம் செய்யலாம். மேலே வார்னிஷ் பூசினால், மரப்பொருள் போலவே இருக்கும். இது ஆபீஸ் டெஸ்க், பரிசுப் பொருளாக விற்க ஏற்றது. இதை விற்பனை பொருளா மட்டுமில்லாம, கிஃப்ட் கொடுக்கவும் வச்சிக்கலாம். நம்ம கையால செய்து கொடுக்கிற கிஃப்ட்க்கு தனி மவுசு தானே?

47
தேங்காய் ஓடுகள்
Image Credit : AI Generated

தேங்காய் ஓடுகள்

தேங்காய் ஓட்டை சுத்தம் செய்து, கீழே ஒரு சின்ன ஓட்டை போடுங்க. பெயின்ட் அடித்து, அதில் கற்றாழை, மணி பிளான்ட் போன்ற செடிகளை வைத்து விற்கலாம். ஒரு பிளான்டர் ₹100-150 வரை விற்கும். இந்த ஓடுகளின் மேல வெள்ளை களிமண் வைத்து பொம்மை போல உருவாக்கியும் விற்பனை செய்யலாம். செலவு கம்மி தான். ஆனா நல்ல லாபம் கிடைக்கும்.

57
பழைய கார் டயர்கள்
Image Credit : AI Generated

பழைய கார் டயர்கள்

பழைய கார், பைக் டயர்களுக்கு பிரகாசமான நிறங்களில் பெயின்ட் அடிங்க. நடுவில் கயிறு கட்டி உட்காரும் ஸ்டூல் செய்யலாம். கஃபே, தோட்டங்களை அலங்கரிக்க இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கு. ஒரு ஸ்டூல் ₹800 முதல் ₹1200 வரை விற்கலாம். விற்க விருப்பமில்லாதவர்கள் உங்க வீட்டு பால்கனி அல்லது நீங்க சில் பண்ற இடங்கள்ல போட்டுக்கலாம்.

67
மார்க்கெட்டிங் முக்கியம்
Image Credit : Gemini AI

மார்க்கெட்டிங் முக்கியம்

நீங்க பண்ற பிசினஸ மார்க்கெட்டிங் பண்றது ரொம்ப முக்கியம். மார்க்கெட்டிங் மூலமா தான் வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைப்பாங்க. உங்க பிசினஸ WhatsApp, Instagram-ல் போட்டோ அல்லது ரீல்ஸா போடுங்க. உங்கள் ஊரில் நடக்கும் கண்காட்சிகளில் ஸ்டால் போடுங்க. Amazon, Flipkart-ல் 'செல்லர்' ஆகி ஆன்லைனிலும் விற்கலாம்.

77
பொறுப்புத் துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள வருமானக் கணக்குகள் ஒரு உதாரணம் மட்டுமே. உங்கள் உழைப்பு, திறமை, மார்க்கெட்டிங் ஆகியவற்றைப் பொறுத்து உண்மையான வருமானம் மாறும். எந்தவொரு தொழிலையும் தொடங்கும் முன், நீங்களே சந்தையை ஆராய்ந்து, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி சிலிண்டர் பத்தி கவலை வேண்டாம்.! இந்த அடுப்பு இருந்தா போதும்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.! ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி.? முழு விவரம் உள்ளே.!
Recommended image2
80 வயது வரை இளமை.! 150 வயது வரை ஆயுட்காலம்.! ரகசிய இனக்குழு மக்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் தெரியுமா? இந்த ஒரு விதை தான் காரணமாம்.!
Recommended image3
Now Playing
Kitchen Hacks | இந்த டிப்ஸ் தெரிஞ்சா குக்கிங் ரொம்ப ஈஸி..! இனி 10 நிமிடத்திலேயே சமையல் ஓவர்.!
Related Stories
Recommended image1
Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Recommended image2
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved