MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எலி உங்கள் வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காமல் இருக்க..இந்த ஒரு பொருள் மட்டும் பயன்படுத்தி பாருங்கள் போதும்..

எலி உங்கள் வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காமல் இருக்க..இந்த ஒரு பொருள் மட்டும் பயன்படுத்தி பாருங்கள் போதும்..

Eli thollai neenga Tamil: உங்கள் வீட்டில் மூலை முடுக்கெல்லாம் எலி புகுந்து விட்டால், இந்த பொருட்களை பயன்படுத்தி அதனை எப்படி விரட்டி அடிப்பது என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Nov 01 2022, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மழைக்காலங்களில், பொதுவாக எலிகள் கதகதப்பான இடம் தேடி அலைந்து நம்முடைய வீடுகளில் தஞ்சம் புகும். இதனை பார்த்து விட்டு சாதாரணமாக எடுத்துக் கொண்டால், சில நாட்கள் சென்றதும் வீடு முழுவதும் குட்டிகள் போட்டு உங்கள் வீட்டிலேயே முழுவதும் குடியேறி விடும். அதன் பிறகு, அவைகளை விரட்டி அடிப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதுமட்டுமின்று, எலியின் எச்சில், முடி எல்லாமே ஆபத்தை விளைவிக்க கூடியது தான். ஆம், எலியின் வாய் பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் மனிதருக்கு காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, வீட்டை எப்போதும் எலி தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடத்தில், இன்னும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு நீங்கள் எப்போதும் வீட்டை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  

36

ஒருவேளை உங்கள் வீட்டில் மூலை முடுக்கெல்லாம் எலி புகுந்து விட்டால், இந்த பொருட்களை பயன்படுத்தி அதனை எப்படி விரட்டி அடிப்பது என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.  

முதலில் அதற்கு நீங்கள் ஒரு வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வட்டமாக நறுக்கி உங்கள் வீடுகளில் எலி வரும் வழிகளில் எல்லாம் இதை வைத்து விடுங்கள் இந்த வாடைக்கு எலி வரவே வராது. 

46

அதேபோன்று, நான்கு முதல் ஐந்து கிராம்பை எடுத்து, ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இதையும் உங்கள் வீட்டில் எலி நடமாடும் இடங்களில் வைத்து விடுங்கள் இந்த கிராம்பு வாடைக்கும் எலி வரவே வராது.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

56

உருளைக்கிழங்கு மாவால் ஆன பவுடரை வீட்டின் மூலை முடுக்குகளில் தூவி விடுங்கள். எலியும் விரும்பி சாப்பிடும். பிறகு அதன் வயிறு வீங்கி இறந்து விடும்.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

66

 எலி வரும் இடத்தில் வெங்காயம் வைத்து விட்டால் நெடிய மணத்துக்கு வராது ஓடி விடும். அதே நேரத்தில் வெங்காயம் சீக்கிரம் அழுகிப் போய் விடும் என்பதால் இரண்டாம் நாள் புதிய வெங்காயத்தை மாற்றுங்கள்.

அதே போல் பூண்டு எடுத்து நன்றாக நசுக்கி அதையும் ஆங்காங்கே வைத்து விடலாம். இது மட்டும் இன்றி நாப்தலின் பால், எலி வரும் இடங்களில் வைத்து விட்டால் இந்த வாடைகளுக்கு எலி வரவே வராது. ஆனால் இதை வைக்கும் போது வீட்டில் குழந்தைகள் தொடும் இடங்களாக இருந்தால் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Recommended image2
Gold Necklace: 10 கிராம் தங்கத்தில் அசத்தலான ஸ்டோன் நெக்லஸ் டிசைன்கள்!
Recommended image3
Iron Tawa vs Non Stick Tawa: இரும்புக்கல்லா… நான்ஸ்டிக் தவாவா? தோசைக்கு எது உண்மையான கில்லாடி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved