கஷ்டமில்லாமல் தேங்காயை ஓட்டிலிருந்து பிரிக்க சூப்பரான '3' டிப்ஸ்!!
Coconut Shell Removal : தேங்காய் ஓட்டினிருந்து தேங்காயை சுலபமாக பிரித்தெடுப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Coconut Shell Removal in Tamil
தேங்காய் எல்லா இந்திய வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கியமான சமையல் பொருளாகும். ஒவ்வொரு உணவிற்கு ஏற்ப தேங்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது மசாலாவாக அல்லது தேங்காய் பாலாக என தேங்காய் பல வழிகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் சமையலுக்கு மட்டுமின்றி, பல இனிப்பு பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி தேங்காய் பல வழிகளில் உபயோகமாக இருந்தாலும், அதை அதன் ஓட்டிலிருந்து பிரித்தெடுப்பது தான் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதுவும் குறிப்பாக, இல்லத்தரசிகள் அவசர அவசரமாக சமையல் செய்து கொண்டிருக்கும் போது, தேங்காயை ஓட்டிலிருந்து பிரிப்பது ரொம்பவே கஷ்டமாக உணருவார்கள். இத்தகைய சூழ்நிலையில், தேங்காயை அதன் ஓட்டிலிருந்து சுலபமாக அகற்றுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Coconut Shell Removal in Tamil
ஃப்ரிட்ஜில் வைக்கவும்:
தேங்காயை ஓட்டிலிருந்து எளிதாக அகற்ற பிரிட்ஜில் சுமார் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு தேங்காயை உடைத்து, அதன் ஓட்டிலிருந்து தேங்காயை சுலபமாக அகற்றி விடலாம்.
Coconut Shell Removal in Tamil
வெதுவெதுப்பான நீர்:
இந்த முறையில் தேங்காயை அதன் ஓட்டிலிருந்து சுலபமாக நீக்கிவிடலாம். இதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் முழு தேங்காயை போட்டு, தேங்காய் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை அதில் ஊற்றி சுமால் 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு தேங்காயை உடைத்து நறுக்கினால் ஓட்டிலிருந்து தேங்காயை சுலபமாக அகற்றிவிடலாம்.
Coconut Shell Removal in Tamil
மைக்ரோவேவ்:
தேங்காயை ஓட்டிலிருந்து ஒரு நொடியில் அகற்ற எளிதான வழி இதுவாகும். இதற்கு முழு தேங்காயை சுமார் 30 வினாடி மைக்ரோவேவில் வைக்க வேண்டும் பிறகு அதிலிருந்து தேங்காயை எடுக்கவும். இப்போது தேங்காயை அதன் ஓட்டிலிருந்து எளிதாக நறுக்கிவிடலாம். மைக்ரோவேவை அதிக வெப்பத்தில் வைக்க வேண்டாம். இல்லையெனில் தேங்காய் உடைந்து விடும்.