- Home
- Lifestyle
- 'தேங்காய் எண்ணெய்' போதும்.. புது பாத்திரத்தில் மீது இருக்கும் ஸ்டிக்கரை தடயமே இல்லாம நீக்கும்
'தேங்காய் எண்ணெய்' போதும்.. புது பாத்திரத்தில் மீது இருக்கும் ஸ்டிக்கரை தடயமே இல்லாம நீக்கும்
புது பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை தடயமே இல்லாமல் சுலபமாக அகற்றுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Tips to Remove Stickers from Vessels
பொதுவாகவே நாம் நம் வீடு மற்றும் கிச்சனுக்கு தேவையான எவர்சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள், கண்ணாடி பாட்டில்கள், மர சாமான்களை பொருட்களை வாங்குவது வழக்கம். அப்படி அவற்றை வாங்கும் போது அதில் புதிதாக ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களை அகற்றினால் அதன் பசை ஒட்டி இருக்கும். ஸ்க்ரப்பர் கொண்டு அவற்றை அகற்றினால் கீறல்கள் விழுந்துவிடும். எனவே எந்தவித சேதாரமும் இல்லாமல் புதிய பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை எளிமையான முறையில் எப்படி அகற்றுவது என்பதற்கான சில வீட்டு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மெழுகுவர்த்தி
புதிதாக வாங்கும் எவர்சில்வர் பாத்திரத்தில் ஒட்டியிருக்கக்கூடிய ஸ்டிக்கர்கள் பெரும்பாலும் கடினமானதாகவே இருக்கும். ஆனால் அவற்றை சுலபமாக அகற்ற மெழுகுவர்த்தி உங்களுக்கு உதவும். இதற்கு மெழுகுவர்த்தியை பற்ற வைத்து பாத்திரத்தின் மீது படாமல் நெருப்பை ஸ்டிக்கரின் மீது மட்டும் காட்டுங்கள். அதுவும் அரை வினாடி மட்டுமே. பிறகு அரை மணி நேரம் கழித்து லேசான சூட்டில் இருக்கும் போது ஸ்டிக்கரின் முனைப் பகுதியை மெல்லமாக பிடித்து இழுங்கள். அதன் பசை பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளாமல் கையோடு எளிமையாக வந்துவிடும்.
தேங்காய் எண்ணெய்
ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு ஒரு பருத்தி உருண்டையில் சிறிதளவு எண்ணெயை நனைத்து அதை ஸ்டிக்கரின் மீது தடவவும் சுமார் பத்து நிமிடங்கள் விட்டுவிட்டு பிறகு ஒரு துணியால் துடைத்தால் மட்டும் போதும். இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய் மட்டும் அல்ல கடுகு எண்ணெய் பேபி ஆயில் கூட பயன்படுத்தலாம். ஆனால் இந்த முறையை நீங்கள் பிளாஸ்டிக் மற்றும் எஃகு பாத்திரங்களில் தான் முயற்சி செய்ய வேண்டும்.
பேக்கிங் சோடா
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட் போலாகே அதை ஸ்டிக்கரில் தடவி பத்து நிமிடம் கழித்து ஒரு துணியால் மெதுவாக தேய்த்தால் போதும் பசியோடு ஸ்டிக்கர் எளிதில் வந்துவிடும்.
சூடான நீர்
ஒரு கிண்ணம் சூடான நீரில் சிறிதளவு பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்த்து நன்றாக கலந்து அதை ஸ்டிக்கரில் தடவி பத்து நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு மெதுவாக ஒரு துணியால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் ஸ்டிக்கர் அகன்று விடும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு
சிறிதளவு எலுமிச்சை சாறில் ஒரு சிட்டிக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அந்த கலவையை ஸ்டிக்கரில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு மெல்லமாக தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் அமிலம் பசையை நீக்கிவிடும். இந்த முறையை எஃகு மற்றும் கண்ணாடி மீதுதான் பயன்படுத்த வேண்டும்.
வினிகர்
ஒரு பருத்தி உருண்டையில் வினிகரை நனைத்து அதை கொண்டு ஸ்டிக்கர் மீது தடவி பத்து நிமிடங்கள் கழித்து துடைக்க வேண்டும். இப்படி செய்தால் பாசை முற்றிலும் அகன்று விடும். இந்த முறையானது பீங்கான், உலோகம், கண்ணாடி போன்றவற்றில் தான் பயன்படுத்த வேண்டும்.
நெயில் பாலிஷ் ரிமூவர்
நெயில் பாலிஷ் ரிமூவரில் அசிடோன் இருப்பதால் அது பசையை அகற்ற பெரிதும் உதவும் ஆனால் இதை பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் நிற மாற்றம் ஏற்படும்.