எலும்புகளுக்கு வலிமை தரும் உளுந்து சட்னி! வெறும் 10 நிமிடம் போதும்..சூப்பரா கிராமத்து ஸ்டைலில் தயார் செய்யலாம்
Ulunthu Chutney Recipe: எலும்புகளை வலுப்பெற செய்யும் உளுந்து சட்னி, வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்துவது எப்படி..? என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Ulunthu Chutney Recipe
ஒருவர் உணவு விஷத்தை பொறுத்த வரை எப்போதும், ஒரே மாதிரியாக சாப்பிட்டால் ரொம்பவே போர் அடித்து விடும். நாவு விதவிதமான உணவுகளை தேடும். நாம் எப்போதும் நமது வீட்டில் இட்லி, தோசைக்கு, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது கார சட்னி சேர்த்து கொள்வோம். இதனை தவிர்த்து, இன்று நாம் உளுந்து சட்னி பற்றி தெரிந்து கொள்வோம்.
Ulunthu Chutney Recipe
பொதுவாக பலவிதமான சட்னிகளுக்கு உளுந்து கண்டிப்பாக தேவை. ஆனால் இந்த உளுந்தை பிரதானமாக கொண்டு செய்யப்படும் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு இடுப்பு எலும்பு வழு பெறும். ஆரோக்கியம் மேம்படும். எனவே, இந்த உளுந்து சட்னியை எப்படி எளிதாக வீட்டில் அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம்.
Ulunthu Chutney Recipe
தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 7
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 15
பூண்டு – ஐந்து பல்
தக்காளி – ஒன்று
உப்பு – தேவையான அளவு
Ulunthu Chutney Recipe
செய்முறை விளக்கம்:
1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து முழு வெள்ளை உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
2. இதனுடன் உங்களுடைய காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
3. பின்னர், ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை விதைகள், நீக்கி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.இந்த பொருட்கள் எல்லாம் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Ulunthu Chutney Recipe
4. பின்னர் இதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள்.
5. வெங்காயம் லேசாக வதங்கி வரும் போது பூண்டு பற்களை நறுக்கி சேருங்கள். அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்து மசிய வதக்கி விட வேண்டும்.
6. பின்னர் இவற்றையும் அப்படியே ஆற விட்டு விடுங்கள். பிறகு இதனை அரைத்து வைத்த, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.