Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்
Chicken liver: பல்வேறு, ஊட்டச்சத்து நன்மைகள் கொண்ட கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ள போகிறோம்.
Chicken liver:
அசைவ உணவு பிரியர்களுக்கு, ஈரல் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இறைச்சியை விட லிவர் என்று அழைக்கப்படும், ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். இதற்கு காரணம் அதன் சுவையும், மென்மை தன்மையும் ஆகும். ஈரலில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. உறுப்பு இறைச்சியில் மிகவும் வலிமை மிக்கது ஈரல் ஆகும்.
Chicken liver:
அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இதில் உண்டு. இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டிற்கு இந்த கோழி ஈரல் நம்மை பயக்கும். மேலும், இதில், போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும் அதிக அளவு உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.
Chicken liver:
1. இதில் புரதம் சத்து அதிகம் கொண்டுள்ளது. எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், ஈரல் ஒரு நல்ல ஒரு உணவாக இருக்கும்.
Chicken liver:
2. ஈரல் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் சோர்வு, குடல் பலமின்மை நீங்கி, உடல் பலம் பெற்று, உடல் சுறுசுறுப்பும், புது தெம்பும் கிடைக்கும்.
3.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவதால் ரத்தம் மளமளவென உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். ரத்த சோகை குறைபாடு நீங்கும்.
Chicken liver:
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டுமா..?
இதில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் ஏ காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகுந்த வைட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. இருப்பினும், ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் மட்டும் ஈரல் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.அதேபோன்று, கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்கலாம். மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி ஈரலுடன் சேர்த்து போட்டு உண்ணலாம். பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
Chicken liver:
ஈரல் சாலையோர கடைகளில் சாப்பிடலாமா..?
பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில், ஹோட்டல்களில் ஆரோக்கியமானதாக சமைக்கப்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, சாலையோர உணவகங்களில் உண்பதை தவிர்த்தால் நல்லது. ஆரோக்கியமான வாழ்வதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் நாம் வீட்டில் சமைத்து, உண்டால் நல்லது.