Mutton: மட்டன் வேகலையா? இந்த ஒரு ஸ்பூன் மேஜிக் பொருளை மட்டும் சேர்த்து பாருங்க!
Mutton: மட்டன் கறி சமைக்கும்போது சரியா வேக மாட்டேங்குதா? குக்கர்ல வெச்சாலும் கறி ரப்பர் மாதிரி இருக்கா? கவலைப்படாதீங்க, இந்த சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காகத்தான். இத ஃபாலோ பண்ணா, மட்டன் பஞ்சு மாதிரி வெந்து, வாயில வெச்சதும் கரையும்.

Mutton Curry
1.பச்சை பப்பாளி
2. தயிர் சேர்த்து ஊறவைத்தல்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், கறியை மென்மையாக்கும். தயிர், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மசாலா சேர்த்து குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. எலுமிச்சை சாறு அல்லது வினிகர்:
சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்தாலும் கறி மென்மையாகும். ஆனால், அதிகமாகச் சேர்த்தால் கறியின் சுவையும் தன்மையும் மாறிவிடும், கவனம் தேவை.
4. பிரஷர் குக்கர்:
முத்தலான கறி குக்கரில் வேகவும் கூடுதல் நேரம் எடுக்கும். அதனால், வழக்கத்தை விட இரண்டு விசில் கூடுதலாக மிதமான தீயில் வேகவிடுங்கள். கறி சீராகவும் சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
5. வெந்நீர் பயன்படுத்துங்கள்:
சமைக்கும்போது இடையில் தண்ணீர் சேர்க்க வேண்டுமென்றால், பச்சைத் தண்ணீருக்குப் பதில் வெந்நீரை ஊற்றுங்கள். இது சமையல் வெப்பநிலையை குறைக்காமல், கறி இறுக்கமாகாமல் பார்த்துக்கொள்ளும்.
6. சிறிய துண்டுகள்:
பெரிய துண்டுகளை விட, நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கினால் கறி சீக்கிரம் வேகும். மசாலாவும் நன்றாகப் பிடிக்கும். இந்த டிப்ஸ்களைப் பின்பற்றினால், எவ்வளவு முத்தலான மட்டனாக இருந்தாலும், அதை சுவையாகவும், ஜூசியாகவும், பஞ்சு போலவும் சமைத்து அசத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

