- Home
- Lifestyle
- Spoiled Milk Sweets : வெறும் '2' நிமிடங்களில் திரிஞ்சு போன பாலில் 'ஸ்வீட்' செய்யலாம்! ஈஸியான ரெசிபி
Spoiled Milk Sweets : வெறும் '2' நிமிடங்களில் திரிஞ்சு போன பாலில் 'ஸ்வீட்' செய்யலாம்! ஈஸியான ரெசிபி
திரிஞ்சு போன பாலில் சூப்பரான ஸ்வீட்ஸ்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இருக்கு பார்க்கலாம்.

Spoiled Milk Sweets
பால் சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருள். எனவே பால் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக பால் கெட்டுப் போனாலே அதை சிங்கில் ஊற்றிவிடுவோம். நீங்களும் அப்படித்தான் கெட்டுப்போன பாலை கொட்டுகிறீர்களா? இனி அப்படி செய்யாமல் அதில் டேஸ்டியான ஸ்வீட்ஸ்களை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அது எப்படியென்று இங்கு பார்க்கலாம்.
டோனட்ஸ் :
இதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப் சுத்திகரிக்கப்பட்ட மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் பேக்கிங் பவுடர், 2 சிட்டிகை உப்பு, கால் கப் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1 கப் கெட்டுப்போன பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தயாரித்து வைத்த மாவுடன் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்ட வேண்டும். ஃப்ரிட்ஜில் சுமார் 2 மணி நேரம் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து டோனட்ஸ் கட்டர் வைத்து டோனட்ஸ் தயார் செய்யவும். பின் அதை பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதன் மீது சாக்லேட் சிரப்பு ஊற்றி அலங்கரிக்கவும். அவ்வளவுதான் சுவையான டோனட்ஸ் ரெடி!
பால் கேக் :
திரிஞ்சு போன பாலில் சுவையான பால் கேக் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 கப் சுத்திகரிக்கப்பட்ட மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 4 ஸ்பூன் சர்க்கரை, உலர் திராட்சை மற்றும் பொடியாக்கிய நறுக்கிய சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் 1/2 கப் கெட்டுபோன பால், 1/2 கப் தண்ணீரும் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1 முட்டை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். பிறகு வெண்ணை தடவப்பட்ட பேக்கிங் தட்டில் இந்த கலவையை ஊற்றி 30 டிகிரி செல்சியஸில் சுமார் 25 நிமிடங்கள் வைத்து சூடுப்படுத்தி எடுக்கவும். அவ்வளவுதான் சூப்பரான பால் கேக் தயார்.
பால்கோவா :
கெட்டுப்போன பாலில் பால்கோவா செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கெட்டுப்போன பாலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதில் 2 கப் சர்க்கரை, 1 ஏலக்காய், 1ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கட்டியான பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். அவ்வளவுதான் டேஸ்டியான பால்கோவா தயார்.
பன்னீர் ;
கெட்டுப்போன பாலில் சூப்பரான இனிப்பு பன்னீர் செய்யலாம். இதற்கு அடிப்படை ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஊற்றவும். பிறகு அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பு மிதமான தீயில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் தனியாகவும், பன்னீர் தனியாகவும் வரும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டவும். பிறகு அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றி அதிலிருந்து எலுமிச்சை சாறு அல்லது வாசனையை அகற்றவும். பன்னீரில் இருந்து தண்ணீரை வடிகட்டிய நன்கு வடிகட்டிய பிறகு பன்னீரை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு சர்க்கரையும் சேர்க்கவும். அவ்வளவுதான் இனிப்பு பன்னீர் தாயார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

