- Home
- Lifestyle
- Sweets : ஸ்வீட் பிரிட்ஜில் வைத்து சாப்பிட பிடிக்குமா? ருசியை விட முக்கியமான விஷயம்; இதை கவனிங்க
Sweets : ஸ்வீட் பிரிட்ஜில் வைத்து சாப்பிட பிடிக்குமா? ருசியை விட முக்கியமான விஷயம்; இதை கவனிங்க
ஃப்ரிட்ஜில் ஸ்வீட்ஸ்களை வைத்தால் அவற்றின் சுவை மற்றும் அமைப்பு கெடும். இதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Storing Sweets in Refrigerato
பொதுவாகவே மீந்தமான ஸ்வீட்ஸ்களை பிரெஷ்ஷாகவும், பாதுகாப்பாக இருக்க அவற்றை நாம் பிரிட்ஜில் வைப்போம். அதிலும் சிலரோ கடையில் வாங்கிட்டு வந்த பேக்கேஜ் உடனே பிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் இப்படி ஸ்வீட்ஸ்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சுவை மற்றும் அமைப்பு கெடும் தெரியுமா? அதை தடுக்க சில எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
காற்று புகாத கொள்கலன்கள் :
காற்று புகாத கொள்கலன்களில் ஸ்வீட்ஸ் கடை சேமிக்க வேண்டும். இதனால் அவற்றின் நறுமணம் தக்க வைக்கப்படும். மேலும் பத்து நாட்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும்.
வெண்ணெய் காகிதம் :
காற்றுப்புகாத கொள்கலனில் ஸ்வீட்ஸ்களை வைக்கும் முன் முதலில் வெண்ணெய் தடவப்பட்ட தாளை வைக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் ஸ்வீட்ஸ்கள் மேல்புறத்தில் கூட வெண்ணெய் தடவிய தாளை வைக்கலாம். இப்படி வைப்பதன் மூலம் ஸ்வீட்ஸ்கள் உலராமல் பிரஷ்ஷாக இருக்கும்.
மூடியை இப்படி மூடுங்கள் !
ஸ்வீட்கள் இருக்கும் கொள்கலனை மூடுவதற்கு முன் மூடியை லேசாக அழுத்த வேண்டும். பிறகு அதன் விளிம்பை லேசாக திறந்து மூடவும். இப்படி செய்தால் உள்ளிருக்கும் காற்று வெளியேறும். இதனால் ஸ்வீட்ஸ்கள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
ஸ்வீட்ஸ்களை தனித்தனியாக வைக்கவும் ;
உலர்ந்த மற்றும் ஈரமான ஸ்வீட்ஸ்களை பிற ஸ்வீட்ஸ்களுடன் ஒன்றாக சேமிக்க வேண்டாம். இல்லையெனில் அவற்றின் நறுமணம் ஈரப்பதம் கலந்து நல்ல ஸ்வீட்ஸின் சுவையை பாதித்துவிடும்.
ஃப்ரீசரில் வைக்காதே!
ரசகுல்லா, குலோப்ஜாம் போன்ற ஸ்வீட்ஸ் கலை ப்ரீசரில் வைக்கவே கூடாது. ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் ஸ்வீட்ஸ்களை உடனே பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அவற்றை ஃப்ரீசரில் வைத்து சேமிக்கலாம்.
நினைவில் கொள் :
கடையிலிருந்து வாங்கிய டப்பாவுடன் ஸ்வீட்ஸ்களை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். இல்லையெனில் ஃப்ரிட்ஜின் குளிர்ந்த காற்று ஸ்வீட்ஸ்களின் மீது பட்டு அதன் ஈரப்பதத்தை இழுத்துக் கொள்ளும். இதனால் அவை சுவையற்றும், உலர்ந்தும் போய்விடும்.