மீதமான ஒரு கப் சாதம் இருந்தால் போதும்...இன்ஸ்டன்ஸ் இட்லி வெறும் பத்து நிமிடத்தில், சூப்பராக தயார் செய்யலாம்..
Rice idli recipe in Tamil: உங்கள் வீட்டில் சாதம் மீந்து போனால் அதனை குப்பையில் போடாமல், இப்படி ன்ஸ்டன்ஸ் இட்லி தயார் செய்து பாருங்கள். இதனால் உங்களின் காசும் மிச்சம் ஆகும், புண்ணியமும் வந்து சேரும்.
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் மீந்து போன உணவில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் அந்த உணவுகளை உட்கொள்வது வழக்கம். இதனால், உடலும் ஆரோக்கியமாக இருந்தது, உணவு பொருட்களும் வீணாய் போவதும் கிடையாது.
ஆனால், இப்போது எல்லாம் பழைய சாதம் சாப்பிடும் பழக்கமும் இல்லை. எல்லோரும் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறோம். எனவே, இனிமேல் உங்கள் வீட்டில் சாதம் மீந்து போனால் அதனை குப்பையில் போடாமல், இப்படி ன்ஸ்டன்ஸ் இட்லி தயார் செய்து பாருங்கள். இதனால் உங்களின் காசும் மிச்சம் ஆகும், புண்ணியமும் வந்து சேரும்.
தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
ரவை – 1 கப்
புளித்த தயிர் – 2 டீஸ்புன்
சமையல் சோடா – 1 டீஸ்புன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
1. முதலில் 1 கப் அளவுக்கு ரவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.
2. பிறகு, மீந்து போன சாதத்தில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிய பிறகு, மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளுங்கள். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி எடுத்து வைத்து விடுங்கள்.
3. ரவை நன்றாக ஊறிய பிறகு அதில் அரைத்து வைத்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் நன்றாக புளித்த தயிரை அதில் சேர்த்து விடுங்கள். இதையும் பத்து நிமிடம் நன்றாக ஊற வைத்து விடுங்கள்.
4. பத்து நிமிடம் கழித்து சமையல் சோடா மாவையும், உப்பையும் சேர்த்து மாவை அடித்து கலந்து வைத்து விடுங்கள். தேவைப்பட்டால் பொடியாக உடைத்த முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.
5. இந்த மாவு ஒரு மணி நேரமாவது தயிரில் ஊறினால் தான் மாவு நன்றாக புளித்து வரும். நீங்கள் உடனடியாகவே ஊற்ற வேண்டும் என்றால் சமையல் சோடா மாவிற்கு பதிலாக ஈனோ உபயோகப்படுத்தலாம். (ஆனால் ஈனோ அடிக்கடி எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது இல்லை) பிறகு ஒரு மணி நேரம் கழித்து இந்த மாவை எடுத்து நீங்கள் வழக்கம் போல் இட்லி சுடலாம். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்கள்.