Pirandai Thuvaiyal: எலும்புக்கு ஆரோக்கியம் தரும் பிரண்டைத் துவையல்..செம்ம டேஸ்டா, இவ்வளவு ஈஸியா செய்து விடலாம்
Pirandai Thuvaiyal in tamil: பிரண்டைத் துவையல், சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.
இன்றைய கால கட்டத்தில், உணவு விஷயத்தில் ஒருவர் ஆரோக்கியமாக உட்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், பல்வேறு உடல் உபாதைகள் வந்து தொல்லை கொடுக்கும். குறிப்பாக, நீரழிவு நோய், இதய நோய் மற்றும் ரத்தசோகை போன்றவை ஒருவருக்கு இளம் வயதிலேயே ஏற்படுகிறது. அதுமட்டுமின்று,
இப்போது எல்லாம் எலும்பு தேய்மானம் என்பது சிறு பிள்ளைகளுக்கு கூட இருக்கிறது.
எலும்பு தேய்மானம் ஒருவருக்கு கால்சியம் பற்றாக்குறை காரணமாக வருகிறது. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரண்டை துவையல் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது. சுவையான பிரண்டை துவையல் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1/4 கப்
நல்லெண்ணெய் – 4 டீஸ்புன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் டீஸ்புன்
வர மிளகாய் – 5
கருவேப்பிலை – 1/4 கப்
கொத்தமல்லி – 1/4 கப்
புதினா – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1 துண்டு
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு – புளி
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் பிரண்டையை கழுவி சுத்தம் செய்து, அதில் நான்கு புறமும் மெலிதாக இருக்கும் நாரை எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, இந்த பிரண்டையை அதில் சேர்த்து நன்றாக பச்சை நிறம் போகும் வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு சற்று பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒரு துண்டு இஞ்சி போட்டு வதக்கி கொள்ளுங்கள். அதில், துருவிய தேங்காய், புளி சேர்த்து மொத்தமாக வறுத்து எடுத்து வைத்து விடுங்கள்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி போட்டு அதன் பச்சை வாடை போகும் வரை லேசாக வதக்கி எடுத்து கொள்ளுங்கள். இதையடுத்து, மிக்ஸி ஜாரில் தேங்காய், உளுத்தம் பருப்பு வறுத்த கலவை போட்டு ஒரு அரை அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு பிரண்டையை போட்டு ஒரு பாதி அளவு அரைபட்டதும், இத்துடன் வதக்கி வைத்துள்ள பொருட்களை போட்டு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து விடுங்கள். இப்படி, உங்களின் ஆரோக்கியமான பிரண்டைத் துவையல் ரெடி.
பின் குறிப்பு: பிரண்டையை சுத்தம் செய்யும் போது கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், சற்று விறுவிறு என்று இருக்கும்.