தினமும் வீட்டில் ஒரே மாதிரி சாப்பாடா.? தெருவே மணக்கும் சுவையான வெங்காய சாதம் ரெசிபி...கொஞ்சம் ட்ரை பண்ணுங்கோ
Onion Rice Recipe: தினமும் சாதம், குழம்பு என வீட்டில் ஒரே மாதிரி உணவு சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா..? ஒருமுறை இந்த சுவையான வெங்காய சாதம் செய்து சாப்பிட்டு பாருங்க, பிறகு நிச்சயம் மிஸ் பண்ண மாடீங்க..
Onion Rice:
தினமும் ஒரே வகையான உணவு சாப்பிட்டு பலருக்கும் அலுத்துப் போயிருக்கும். எனவே வார இறுதி நாட்களிலாவது இப்படி வித்தியாசமான சுவையில் இருக்கும் உணவை முயற்சி செய்து பார்க்கலாம். இதன் சுவை அனைவருக்கும் விருப்பமானதாகவே இருக்கும். இதனை செய்வது மிகவும் சுலபமான விஷயம்தான். வெறும் தக்காளி, வெங்காயம் இருந்தால் போதும் உடனே இதனை செய்து விடலாம். இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வெங்காய சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Onion Rice:
தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
வெங்காயம் _ 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்புன்
எண்ணெய் – 3 டீஸ்புன்
முட்டை – 4
கறிவேப்பிலை – ஒரு குத்து
மிளகாய்த்தூள் – 1 டீஸ்புன்
தனியா தூள் – 1 டீஸ்புன்
உப்பு – 1 டீஸ்புன்
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் – 2ல் இருந்து மூன்று
கடுகு _ 1 டீஸ்புன்
நெய் – 1 டீஸ்புன்
மிளகுத்தூள் – 1 டீஸ்புன்
Onion Rice:
செய்முறை விளக்கம்:
1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. பின்னர் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. பின்னர், அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
Onion Rice:
4. பிறகு முட்டை உடைத்து நன்றாக கலந்து வைத்து, அதனுடன் சேர்த்து வதக்கவும். முட்டை நன்றாகக் கலந்து தண்ணீர் வற்றியதும், அதனுடன் வடித்து வைத்த சாதத்தையும் சேர்த்து கலந்து விடவும்.சாதம் குழையாமல் இருக்க வேண்டும்.
5,. இறுதியாகஅதனுடன் மிளகுத்தூளும், நெய்யும், கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி சிம்மில் வைத்து இறக்கவும்.இப்போது சுவையான வெங்காய சாதம் தயார் ஆகி விட்டது.