Masturbate: பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏன் சுய இன்பம் கொள்கிறார்கள்? அதற்கு பின்னால் இவ்வளவு ரகசியம் இருக்கா?
Masturbate: மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஏன் சுய இன்பம் கொள்கிறார்கள்..? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்னெ என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Masturbate
சுயஇன்பம் பற்றி பெரும்பாலானோர் வெளிப்படையாக பேசத் தயங்குவார்கள். நமக்கு நாமே உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது தான் சுய இன்பம். ஆண்,பெண் இருவருமே சுய இன்பத்தில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். சுய இன்பம் காண செக்ஸ் பார்ட்னர் என்று யாரும் தேவையில்லை.
Masturbate
பெண்கள் சுய இன்பம் கொள்வது சரியா..? தவறா.?
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபவதைக் குறிப்பது தான் மென்ஸ்ட்ரபேஸன். இது நம்முடைய சமூகத்தில் சீர்கேடாக பார்க்கப்படுகிறது. இதனால் பலரும் மிகுந்த குற்ற உணர்ச்சி, அவமானம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் மாதவிடாய் காலத்தில் இடுப்பு மற்றும் வயிற்று வலியால் அதிகமாக கஷ்டப்படுவார்கள். அந்த சமயத்தில் உடலுறவு அல்லது சுய இன்பம் செய்வதால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உற்சாகத்தையும் இன்பத்தையும் தரும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே, சுய இன்பம் செய்யும் யாரும் எந்தவித எதிர்மறையான எண்ணங்களுக்கு ஆளாக வேண்டாம். எவ்வித குற்ற உணர்வும் வேண்டாம். இருப்பினும் அளவோடு பார்த்து கொள்வது நல்லது.
Masturbate
எனவே, பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
வலி நிவாரணி
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க இது உதவும். மேலும், சுயஇன்பம் பிடிப்புகள், வயிறைப் பிசைவது, முதுகுவலி, தலைவலி மற்றும் மூட்டு வலிகளை சமாளிக்க உதவும். சுய இன்பம் மூலமாக உச்சகட்டத்தை அடைந்துவிட்டால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
Masturbate
சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்
சுயஇன்பத்தின் போது ப்ரோலாக்டின் என்ற வேதிப்பொருள் வெளியிடப்படுகிறது, இது தூக்கத்தின் உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
மனநிலை மேம்பாடு
மாதவிடாய் நாட்களில பெரும்பாலான பெண்களுக்கு மூட் ஸ்விங், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். எனவே, மாதவிடாய் நேரத்தில் ஈடுபடும் உச்சகட்ட சுய இன்பத்திற்குப் பிறகு ஒரு பெண் மூட் ஸ்விங் இல்லாமல் மகிழ்ச்சியாக இயல்பாக இருப்பதாக ஆய்வுகள் சுட்டி காட்டியுள்ளனர். இதனால் அடிக்கடி ஏற்படும் தலைவலி, மன குழப்பம் போன்றவை எளிதில் குணமடையும்.
உங்கள் மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும்:
மாதவிடாய் சமயத்தில் உடலுறவு அல்லது சுய இன்பம் செய்வதால், ஆஃசிடாக்ஸின் (oxytoxin) என்ற ஹார்மோன் சுரந்து உடலுக்கு ஒருவித மகிழ்ச்சியை தரும். இதனால், உங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உற்சாகத்தையும் இன்பத்தையும் தரும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
SEX
பாலியல் நோய்த்தொற்று நோய்கள்:
மாதவிடாய் சமயங்களில் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் உடலில் ஹார்மோன் சுரப்புகள் சீராக இருக்கும். அதனால் அதிக உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும். மேலும், சுய இன்பம், பரஸ்பர சுய இன்பம் கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்த்தொற்றுகளைத் (STIs) தவிர்ப்பதற்கான நல்ல வழிகள் ஆகும். அப்படியாக, மாதவிடாய் கால சுய இன்பத்தில் நிறைய பயன்கள் கிடைக்கின்றன.