Kambu Chapathi: நார்ச்சத்து நிறைந்த கம்பு சப்பாத்தி..ரொம்ப டேஸ்டியா..சுலபமா? இப்படி ஒருமுறை செஞ்சு அசத்துங்கள்
Kambu chapathi in tamil: பாரம்பரிய மிக்க கம்பு தானியத்தை கொண்டு சுலபமான முறையில் கம்பு சப்பாத்தி எப்படி தயார் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
kambu chapathi in tamil
பொதுவாக, சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை. இத்தகைய சிறுதானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ள கம்பு முக்கியமானது. கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இத்தகைய பாரம்பரிய மிக்க கம்பு தானியத்தை கொண்டு சுலபமான முறையில் கம்பு சப்பாத்தி எப்படி தயார் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
kambu chapathi in tamil
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – மூன்று கப்
கோதுமை மாவு – ஒரு கப்
தண்ணீர் – இரண்டு கப்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
kambu chapathi in tamil
கம்பு சப்பாத்தி செய்முறை விளக்கம்:
1. முதலில் மூன்று கப் அளவிற்கு கம்பு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கம்பு மாவு கடையிலும் கிடைக்கும். இல்லையென்றால் வீட்டிலேயும், அரைத்தும் வைத்துக் கொள்ளலாம்.
2. இந்த மாவை வெறும் ஈரமில்லாத பாத்திரத்தில் சேர்த்து வாசம் வர குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். வறுத்து எடுத்த இந்த மாவினை நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
கம்பு சப்பாத்தி செய்முறை விளக்கம்:
1. முதலில் மூன்று கப் அளவிற்கு கம்பு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கம்பு மாவு கடையிலும் கிடைக்கும். இல்லையென்றால் வீட்டிலேயும், அரைத்தும் வைத்துக் கொள்ளலாம்.
2. இந்த மாவை வெறும் ஈரமில்லாத பாத்திரத்தில் சேர்த்து வாசம் வர குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். வறுத்து எடுத்த இந்த மாவினை நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
kambu chapathi in tamil
3. அதன் பிறகு ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவினை சேர்க்க வேண்டும். பின்னர் சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் மிதமான தீயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கம்பு மற்றும் கோதுமை மாவு கலந்து உருண்டையாக திரண்டு வரும் அளவு கரண்டியால் கிண்டி விட வேண்டும்.
kambu chapathi in tamil
4. கெட்டியாக மாவு திரண்டு வெந்து வந்த பின்பு அதனுடன் சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி போல எல்லா இடத்திலும் ஒன்று போல பிசைந்து தட்டி 15 நிமிடம் மூடி வைத்து ஊற வைத்து விடுங்கள். பின்னர், இதனை எண்ணெய் அல்லது கோதுமை மாவு கொண்டு சப்பாத்தி போல வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
kambu chapathi in tamil
5. அதன் பிறகு, அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து கடலை எண்ணெய் விட்டு, சப்பாத்தி போல் சுட்டு எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் சுட சுட வெஜிடபிள் குருமா அல்லது சுண்டல் மசாலா வைத்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.