- Home
- Lifestyle
- Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
இட்லி தட்டில் இட்லி ஒட்டாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்.

Soft Idli Tips
இட்லி தென்னிந்தியாவின் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்றாகும். வேகவைத்து தயாரிக்கப்படும் இது பஞ்சு போல மென்மையாகவும், சாப்பிடுவதற்கு சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். குறைந்த கலோரி உணவு என்பதால் பலரும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர்.
Idli Cooking Tips
பொதுவாக இட்லி தயாரிக்கும் போது இட்லியானது தட்டில் ஒட்டிக் கொள்ளும். அதை அகற்றுவது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் இட்லி தட்டில் இட்லியை ஒட்டாமல் எடுக்கலாம். அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
இட்லி தட்டில் இட்லி ஒட்டாமல் இருக்க...
இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து அதை இட்லி தட்டில் தடவ வேண்டும். பிறகு மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இட்லி எடுப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் ஸ்பூனில் எண்ணெய் தடவ மறக்காதீர்கள்.
இட்லி புசுபுசுனு வர...
இட்லி புசுபுசுன்னு வர சிறிதளவு கொள்ளுவை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து அதை இட்லி மாவில் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு எப்போதும் போல ஆவியில் வேகவைத்து அவிக்கவும். இப்படி செய்தால் இட்லி புசுபுசுனு வரும்.
இட்லிக்கு அரிசி மற்றும் உளுந்து ஊற வைக்கும்போது அதனுடன் ஒரு ஸ்பூன் கோதுமையை சேர்த்து ஊற வைத்து அரைத்தால் இட்லி நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மென்மையாக இருக்கும்.
இட்லி மாவு புளித்து விட்டால்...
இட்லி மாவு புளித்து விட்டால் அதை தூரக்கொட்டாமல் ஒரு கிளாஸ் தண்ணீரை அதில் ஊற்றி சில நிமிடம் அப்படியே வைத்து விட்டுங்கள். இட்லி மாவு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் அந்தத் தண்ணீரை வடிகட்டிவிட்டால் மாவு புளிக்காது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

