MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Idli: தினமும் இட்லி சாப்பிட்டால் நல்லதா? கெடுதலா? உடல் எடை குறையுமா?

Idli: தினமும் இட்லி சாப்பிட்டால் நல்லதா? கெடுதலா? உடல் எடை குறையுமா?

Benefits of Eating Idli Everyday: இட்லி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Sep 19 2024, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Idli

Idli

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு இட்லி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நெய், மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அருமை பேஸ் பேஸ் என்பார்கள். இதுவே கார சட்னி, அசைவம் சேர்த்து சாப்பிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும் என்பார்கள். சிலர் தினமும் இட்லி சாப்பிடுவார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் கூட இட்லி சாப்பிடுவார்கள். இப்படி இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை இப்போது பார்க்கலாம்.

25
Benefits of Eating Idli Everyday

Benefits of Eating Idli Everyday

இட்லிகள் பெரும்பாலும் நாம் புளிக்க வைத்தவை. இதனால் இட்லி சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். செரிமான பிரச்சனைகள் வராது. குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கலோரிகள் ரொம்பவே குறைவு. நார்ச்சத்து நிறைந்த உணவு. அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், கொஞ்சமாக சாப்பிட்டாலும் கூட அதிகமாக சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

35
Idly (Idli)

Idly (Idli)

இதனால், எடை இழக்கக் கூடும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நாள்தோறும் இட்லி சாப்பிடலாம். இட்லி சாப்பிடுவதால் தேவையான புரதம் கிடைக்கிறது. அதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது. இட்லி உளுந்து மாவில் தயாரிக்கப்படுகிறது. அதனால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது. இரத்த சோகை பிரச்சனைக்கான வாய்ப்பும் குறைவு.

45
Benefits of Eating Idli Everyday

Benefits of Eating Idli Everyday

இட்லியில் கொழுப்புச் சத்து குறைவு. கெட்ட கொலஸ்ட்ராலும் கரைகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட யாரும் சாப்பிடலாம். நாள்தோறும் இட்லி சாப்பிடுவதால் வேறென்ன நன்மைகள் உண்டாகும் என்று பார்க்கலாம் வாங்க

உடல் எடை குறையும்: இட்லியில் போதுமான அளவு புரதம் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக உடல் எடை கொண்டவர்கள் கூட நாள்தோறும் இட்லி சாப்பிடலாம். இதனால், அடிக்கடி பசி எடுக்காது. உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

55
Benefits of Eating Idli Everyday

Benefits of Eating Idli Everyday

குடல் ஆரோக்கியம் மேம்படும்: இட்லி போன்ற புளித்த உணவு உட்கொள்வது உங்கள் உணவில் அதிக வசியமான புரோபயாடிக்குகளை சேர்க்கிறது. இது உங்கள் குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை அதிகரிக்கிறது.

எளிதில் ஜீரணிக்கக் கூடியது: இட்லி மற்றும் சாம்பார் ஆகியவை வளர்ச்சிக்கு மாற்றத்திற்கு எளிதானவை. வேக வைத்த உணவு என்பதால் எள்தில் ஜீரணமாகக் கூடியது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved