MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 'கிராம்பு' வச்சு இப்படி ஒரு ட்ரிங் செஞ்சி குடிங்க; உடல் எடை மளமளவென குறையும்!

'கிராம்பு' வச்சு இப்படி ஒரு ட்ரிங் செஞ்சி குடிங்க; உடல் எடை மளமளவென குறையும்!

Clove Drink For Weight Loss : கிராம்பு வைத்து தயாரிக்கப்படும் இந்த பானத்தை தினமும் காலை வெறும் குடித்து வந்தால் உடல் எடையை விரைவிலே குறைந்துவிடும்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 18 2024, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Clove Drink For Weight Loss In Tamil

Clove Drink For Weight Loss In Tamil

கிராம்பு என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் நல்ல மணம் கொண்ட மசாலா பொருட்களில் ஒன்றாகும். இது வெறும் மசாலா பொருள் மட்டுமல்ல, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் சில மசாலா பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.

கிரம்பு பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதனால் தான் இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் முதல் பிரியாணி வரை என கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் கிராம்பு உள்ளது.

25
Clove Drink For Weight Loss In Tamil

Clove Drink For Weight Loss In Tamil

அந்த வகையில், கிராம்பு உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் கிராம்பு நிச்சயம் உங்களுக்கு உதவும். ஏனெனில் கிராமத்தில் இருக்கும் பண்புகள் செரிமானம் மற்றும் வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் இது கொழுப்பை வேகமாக எரிக்க பெரிதும் உதவுகிறது. கிராம்பில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு உள்ளது. அது தவிர இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. 

இதையும் படிங்க:  கிராம்பு டீயில் இத்தனை நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா விட மாட்டீங்க!

35
Clove Drink For Weight Loss In Tamil

Clove Drink For Weight Loss In Tamil

இத்தகைய சூழ்நிலையில், கிராம்புடன் சில மசாலாப் பொருட்களை சேர்த்து ஒரு பானத்தை தயாரித்து குடித்து வந்தால் உடல் எடை மளமளவென குறைந்துவிடும். இப்போது அந்த பானத்தை தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: கிராம்புக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா? வெறும் வயிற்றில் சாப்பிட்டால் '3' அற்புத நன்மைகள்!! 

45
Clove Drink For Weight Loss In Tamil

Clove Drink For Weight Loss In Tamil

உடல் எடையை குறைக்கும் பானம்:

தேவையான பொருட்கள் :

கிராம்பு - 50 கிராம் 
இலவங்கப்பட்டை - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்

தயாரிக்கும் முறை:

இதற்கு முதலில் அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக வாசனம் வரும் வரை வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த பொடியை காற்று புகாத ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரில், தயாரித்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். பிறகு அதை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

55
Clove Drink For Weight Loss In Tamil

Clove Drink For Weight Loss In Tamil

கிராம்பு நன்மைகள்:

கிராம்பு எடை இழப்புக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.  அதன் நன்மைகள் இங்கே:

-  டீயில் கிராம்பு சேர்த்து குடித்து வந்தால் சளி, காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்றுகளில் நிவாரணம் அளிக்கும்.

- கிராம்பு ஒரு இயற்கையான அறை புத்துணர்ச்சி என்பதால், இதை உங்கள் வீட்டின் உலர்ந்த இடங்களில் வைக்கவும்.

- முகப்பருவால் அவதிப்படுபவர்களுக்கு கிராம்பு ரொம்பவே நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved