சீக்கிரம் வாடாமல் வெள்ளரிக்காய் ப்ரெஷா இருக்க சூப்பர் டிப்ஸ்!!
Cucumber Storage Tips : வெள்ளரிக்காய் நீண்ட நாள் கெடாமல் பிரிட்ஜில் ப்ரெஷா வைப்பது எப்படிஎன்பதை பற்றி இங்கு காணலாம்.

சீக்கிரம் வாடாமல் வெள்ளரிக்காய் ப்ரெஷா இருக்க சூப்பர் டிப்ஸ்!!
வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதை பச்சையாகவோ அல்லது சாலட் ஆகவோ சாப்பிடலாம். இதில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பு குறைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கோடைக்காலத்தில் இது சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இத்தகைய சூழ்நிலையில், இதை சரியாக சேமிக்காவிட்டால் அது சீக்கிரமாகவே சுருங்கிவிடும். எனவே வெள்ளரிக்காய்களை கெட்டுப் போகாமல் பிரிட்ஜில் நீண்ட நாள் புத்துணர்ச்சியாக வைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்ஜில் வெள்ளரிக்கையை சேமிப்பது எப்படி?
வெள்ளரிக்காய் பார்ப்பதற்கு ரொம்பவே கடினமாக எடுக்கலாம். ஆனால் அது மென்மையாகவும், சீக்கிரமாகவே சுருங்கக் கூடியது. எனவே நீங்கள் வாங்கிய வெள்ளரிக்காய் நீண்ட நாள் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், ஆனால் அவற்றை பிரிட்ஜில் வைத்து சேமிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் அவை ஒரு வாரம் ஆனாலும் ப்ரெஷாக இருக்கும். அது என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஈரமாக இருக்கும்போது ஃப்ரிட்ஜில் வைக்காதே!
வெள்ளரிக்காயை தண்ணீரைக் கொண்டு நன்றாக சுத்தம் செய்த பிறகு ஒரு துண்டால் நன்றாக துடைத்த பிறகு தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனால் அப்படியே வைக்காமல் டிஷ்யூ பேப்பரில் வைத்து வைக்கவும். இப்படி வைப்பதன் மூலம் வெள்ளரிக்காய் நீண்ட நாள் ப்ரெஷாக இருக்கும்.
இதையும் படிங்க: தேயிலை கெட்டுப்போகுமா? எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா?
அடிக்கடி வெளியே எடுக்காதே!
வெள்ளரிக்காயை பிரிட்ஜில் வைத்த பிறகு அடிக்கடி வெளியே எடுப்பது தவிர்க்க வேண்டும். தேவைப்படும்போது மட்டுமே வெளியே எடுக்க வேண்டும். அதுபோல வெளிய எடுத்த பிறகு நீண்ட நிறம் வெளியே வைப்பது நல்லதல்ல.
இதையும் படிங்க: உருளைக்கிழங்கு வேக வைக்குறப்ப குக்கர் கருப்பாகுதா? தடுக்க டிப்ஸ்!
நறுக்கிய வெள்ளரிக்காயை சேமிப்பது எப்படி?
வெட்டப்படாத வெள்ளரிக்காயை விட வெட்டிய வெள்ளரிக்காய் விரைவாகவே கெட்டுவிடும். எனவே வெட்டப்பட்ட வெள்ளரி காய்களை காற்று புகாத பையில் வைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். தோல் நீக்கப்பட்ட வெள்ளரிக்காயை மீதமிருந்தால் அவற்றை பிளாஸ்டிக் பையில் சரியாக சுற்றி பிரிட்ஜில் வைக்க மறக்காதீர்கள்.