MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bananas: வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுப்போகுதா? சமையலறையில் இருக்கும் 'இந்த' ஒரு பொருள் போதும்!

Bananas: வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுப்போகுதா? சமையலறையில் இருக்கும் 'இந்த' ஒரு பொருள் போதும்!

Bananas: நீங்கள் வீட்டில் வாங்கி வைத்த வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுப்போகுதா? வாழைப்பழத்தை நீண்ட நாட்கள் கெடாமல் ப்ரெஷ்ஷாக வைத்து இருப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 25 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாழைப்பழம் நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்
Image Credit : AI

வாழைப்பழம் நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்

நமது நாட்டில் ஏழை, எளியவர்கள் என அனைவரும் சாப்பிடும் ஒரே பழம் என்றால் அது வாழைப்பழம் தான். இதில் விலையும் குறைவு. அதே சமயம் சத்துகள் ஏராளம். வீட்டில் வாங்கி வந்த வாழைப்பழம், ஓரிரு நாட்களிலேயே தோல் கறுத்து, குழைந்து போவது என்பது நம்மில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை. குறிப்பாக, மொத்தமாக ஒரு சீப்பு வாழைப்பழங்களை வாங்கும்போது, அவை சீக்கிரம் பழுத்து வீணாகிவிடும். ஆனால், இதைத் தவிர்க்க உங்கள் சமையலறையிலேயே ஒரு எளிய தந்திரம் இருக்கிறது; அதுதான் அலுமினியம் ஃபாயில்.

வாழைப்பழங்கள் பழுக்கும்போது இயற்கையாகவே எத்திலீன் என்ற வாயுவை வெளியிடுகின்றன. இந்த வாயுதான் பழம் வேகமாகப் பழுத்து, மென்மையாகக் காரணமே. வாழைப்பழத்தின் தண்டுப் பகுதியை அலுமினியம் ஃபாயில் கொண்டு இறுக்கமாகச் சுற்றும்போது, இந்த எத்திலீன் வாயு வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, பழம் பழுக்கும் வேகம் குறைந்து, சில நாட்களுக்குக் கூடுதலாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அலுமினியம் ஃபாயில் தந்திரம்: எப்படிச் செய்வது?
Image Credit : Freepik

அலுமினியம் ஃபாயில் தந்திரம்: எப்படிச் செய்வது?

வாழைப்பழ சீப்பின் மொத்த தண்டுப் பகுதியையும் ஃபாயிலால் சுற்றுவதை விட, ஒவ்வொரு வாழைப்பழத்தையும் தனித்தனியாகப் பிரித்து, அதன் காம்புப் பகுதியைச் சுற்றுவது இன்னும் சிறப்பான பலனைத் தரும். ஏனென்றால், இது ஒவ்வொரு பழத்திலிருந்தும் வாயு வெளியேறுவதைத் தனித்தனியாகக் கட்டுப்படுத்தும். பழத்தின் மற்ற பகுதிகளைச் சுற்றத் தேவையில்லை, காம்புப் பகுதியை மட்டும் சுற்றினால் போதுமானது.

நிச்சயமாக, இது வாழைப்பழங்கள் என்றென்றைக்கும் கெட்டுப் போகாமல் தடுக்கும் ஒரு மந்திரக்கோல் அல்ல. ஆனால், வழக்கத்தை விட சில நாட்கள் கூடுதலாக அதன் புத்துணர்ச்சியைத் தக்கவைக்க இந்த முறை நிச்சயம் உதவும். இதைவிட ஒரு சிம்பிள் டெக்னிக் இருக்க முடியுமா என்ன?

Related Articles

Related image1
Kitchen Hacks: வாழைப்பழம் சீக்கிரம் கருப்பாகுதா? இனி கவலையே வேண்டாம், இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
Related image2
Banana Science: வாழைப்பழம் ஏன் வளைந்திருக்கு தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய அறிவியல் ரகசியம்!
34
வாழைப்பழத்தைப் பாதுகாக்க மேலும் சில சூப்பர் டிப்ஸ்
Image Credit : Freepik

வாழைப்பழத்தைப் பாதுகாக்க மேலும் சில சூப்பர் டிப்ஸ்

ஃபாயில் சுற்றுவதுடன், வேறு சில விஷயங்களையும் கவனித்தால், வாழைப்பழங்களை இன்னும் சில நாட்கள் ப்ரெஷ்ஷாக‌ வைத்திருக்கலாம். ஆப்பிள், தக்காளி, அவகேடோ போன்ற பழங்கள் அதிக எத்திலீன் வாயுவை வெளியிடுபவை. எனவே, வாழைப்பழங்களை ஒருபோதும் இந்தப் பழங்களுடன் ஒரே கூடைக்குள் சேர்த்து வைக்காதீர்கள்.

வாழைப்பழங்களை நேரடியாக சூரிய ஒளி படும் இடத்திலோ, அடுப்புக்கு அருகிலோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக வெப்பம் பழுக்கும் வேகத்தை அதிகரித்துவிடும். நல்ல காற்றோட்டமான, சற்றே குளிர்ச்சியான இடத்தில் அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது. பழங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும்போது, அதன் எடையால் அழுத்தம் ஏற்பட்டு காயங்கள் உண்டாகும். இந்தக் காயம்பட்ட இடங்கள் விரைவாகக் கறுத்துவிடும். இதைத் தவிர்க்க, வாழைப்பழங்களை ஒரு கொக்கியில் தொங்கவிடுவது மிகச் சிறந்த வழியாகும்.

44
பழுத்த பழங்களை என்ன செய்வது?
Image Credit : Freepik

பழுத்த பழங்களை என்ன செய்வது?

இத்தனை செய்தும் பழங்கள் அதிகமாகப் பழுத்துவிட்டால் கவலை வேண்டாம். அவற்றை ஸ்மூத்தி, மில்க்‌ஷேக், கேக் அல்லது பான்கேக் செய்யப் பயன்படுத்தலாம். மேலும், பழுத்த பழங்களை துண்டுகளாக்கி, ஃபிரீசரில் சேமித்து வைத்தால், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழைப்பழம்
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Acne : முகப்பரு ஏன் வருகிறது? தவிர்க்க என்ன சாப்பிடணும், என்ன செய்யக்கூடாது?
Recommended image2
குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை அழகாக்க சத்குரு தரும் சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Dandruff: பொடுகை விரட்ட 6 சூப்பர் டிப்ஸ்... இனி தொல்லையே இல்லை!
Related Stories
Recommended image1
Kitchen Hacks: வாழைப்பழம் சீக்கிரம் கருப்பாகுதா? இனி கவலையே வேண்டாம், இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Banana Science: வாழைப்பழம் ஏன் வளைந்திருக்கு தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய அறிவியல் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved