MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீங்க வாங்கும் பேக், செருப்பு ஒரிஜினல் லெதர் தானா? கண்டுபிடிக்க 5 சூப்பர் வழிகள்

நீங்க வாங்கும் பேக், செருப்பு ஒரிஜினல் லெதர் தானா? கண்டுபிடிக்க 5 சூப்பர் வழிகள்

லெதர் பொருட்கள் எப்போதுமே ராயல் லுக் தரும். ஆனால், இன்று ஒரிஜினல் எது, டூப்ளிகேட் எது என அறிவது கடினம். ஷாப்பிங்கில் ஏமாறாமல் இருக்க, நீங்கள் வாங்கும் பேக், செருப்பு உண்மையான லெதர் தானா என்று 5 நொடியில் கண்டுபிடிக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

1 Min read
Author : Priya Velan
Published : May 27 2026, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
'முள்' போன்ற துளைகள்
Image Credit : Getty

'முள்' போன்ற துளைகள்

ஒரிஜினல் லெதர் என்பது விலங்குகளின் தோலால் செய்யப்படுவது. அதனால், அதன் மேல் பகுதியில் இயற்கையான, சீரற்ற குட்டி குட்டி துளைகள் (Pores) இருக்கும். அதுவே போலி லெதர் என்றால் பிளாஸ்டிக் கோட்டிங் இருப்பதால், அதன் மேல் பகுதி எந்த வித துளைகளும் இல்லாமல் ரொம்ப 'பர்பெக்ட்டா' வழவழனு இருக்கும்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
நகத்தால் ஒரு 'அழுத்தம்' கொடுங்க!
Image Credit : Getty

நகத்தால் ஒரு 'அழுத்தம்' கொடுங்க!

வாங்கும் பொருளின் ஒரு ஓரத்தில் உங்கள் நகத்தால் லேசாக அழுத்திப் பாருங்கள். ஒரிஜினல் லெதர் என்றால் அந்த இடத்தில் லேசான சுருக்கமோ அல்லது தழும்புகளோ விழுந்து, மெதுவாக பழைய நிலைக்குத் திரும்பும். போலி லெதர் என்றால் ரப்பர் மாதிரி இருக்கும், நகத்தின் அச்சு கூட விழாது!

Related Articles

Related image1
Easy Shopping : உங்களுடைய ஷாப்பிங் சுமையை தூக்கிவர இனி ஆள் வச்சுக்கலாம்!
Related image2
Online Shopping : ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. உடனே நோட் பண்ணுங்க
35
ஓரங்களை உற்றுப் பாருங்கள்!
Image Credit : Getty

ஓரங்களை உற்றுப் பாருங்கள்!

லெதர் பையின் வெட்டப்பட்ட ஓரங்களை (Edges) பாருங்கள். உண்மையான லெதராக இருந்தால், அதன் ஓரங்கள் சற்று கரடுமுரடாகவும், இழைகளுடனும் (Rough and Fibrous) இருக்கும். அதுவே டூப்ளிகேட் லெதர் என்றால், அதன் ஓரங்கள் பிளாஸ்டிக் வெட்டப்பட்டது போல ரொம்ப 'ஷார்ப்' ஆகவும், ஸ்மூத்தாகவும் இருக்கும்.

45
லெதர் மேல் ஒரு சொட்டுத் தண்ணீர்
Image Credit : Getty

லெதர் மேல் ஒரு சொட்டுத் தண்ணீர்

ஷாப்பிங் போகும் போது யாருக்கும் தெரியாமல் ஒரு சொட்டுத் தண்ணீரை அந்த லெதர் மேல் வச்சுப் பாருங்க. உண்மையான லெதர் இயற்கையாகவே தண்ணீரை சில நொடிகளில் உறிஞ்சிக் கொள்ளும் . அதுவே போலியான லெதர் பிளாஸ்டிக் கலந்தது என்றால், தண்ணீர் உறிஞ்சப்படாமல் அப்படியே உருண்டோடிவிடும்!

55
சலுகை விலை (Discount):
Image Credit : Getty

சலுகை விலை (Discount):

பியூர் லெதர் தயாரிப்பதற்கு அதிக செலவாகும். 'ஒரிஜினல் லெதர் ஹேண்ட் பேக் வெறும் 300 ரூபாய்' என்று யாராவது விற்றால், கண்ணை மூடிக்கொண்டு முடிவு செய்துவிடுங்கள் அது டூப்ளிகேட் என்று! தரமான லெதர் பொருட்கள் எப்போதுமே சற்று விலை அதிகமாகத்தான் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஃபேஷன்
ஷாப்பிங்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Laundry Tips: வெள்ளை சாக்ஸ் கறையா? இனி கவலை வேண்டாம்... பளிச்னு மாத்த சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
Moringa Water: தினமும் முருங்கைக்கீரை தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? நன்மைகள் இதோ!
Recommended image3
Jhumka: பாரம்பரிய 6 கண்கவர் வெள்ளி காஷ்மீரி ஜிமிக்கி கம்மல் டிசைன்கள்
Related Stories
Recommended image1
Easy Shopping : உங்களுடைய ஷாப்பிங் சுமையை தூக்கிவர இனி ஆள் வச்சுக்கலாம்!
Recommended image2
Online Shopping : ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. உடனே நோட் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved