சர்க்கரை கலக்காத ஒரிஜினல் 'கருப்பட்டியை' கண்டுபிடிக்கும் சூப்பர் டிப்ஸ்.!!
Original Karupatti : நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா? அல்லது போலியா? என்பதை கண்டறிய சில வழிகள் இங்கே.

சர்க்கரை கலக்காத ஒரிஜினல் 'கருப்பட்டியை' கண்டுபிடிக்கும் சூப்பர் டிப்ஸ்.!!
கருப்பட்டி பனை மரத்திருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. அதாவது இது பதனீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. இது பனைவெல்லம், பானாட்டு, பனை அட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில் இன்று வரை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டின்தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நகரப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு கருப்பட்டியின் அற்புத நன்மைகள் பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. அவற்றின் நன்மைகளை தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மிஸ் பண்ணவே மாட்டார்கள்.
கருப்பட்டி நன்மைகள்:
கருப்பட்டியில் இரும்புச்சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியே பலப்படுத்தும் பண்புகளும் உள்ளன. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு கருப்பட்டி மிகவும் நன்மை பயக்கும். அதாவது வயதிற்கு வந்த பெண் குழந்தைக்கு அதிக இரத்த போக்கு ஏற்படும். அதை கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் ஆரோக்கியமாக வைக்கவும் மற்றும் கர்ப்பப்பையை வலுப்பெற செய்யவும் பெரிதும் உதவுகின்றது. மேலும் சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் டீ, காபி குடிக்கும் போது அதில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி போட்டு குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும். அதுமட்டுமின்றி கருப்பட்டி உடலை சுறுசுறுப்பாக வைக்கும் மற்றும் சருமத்தை பளபளப்பாக்கும். எனவே, நீங்கள் இதில் டீ காபி தவிர அல்வா, பணியாரம், களி, கூழ் என பலவிதமான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க: வெல்லத்தில் கலப்படம்; போலியை சுலபமா கண்டுபிடிக்க இந்த '1' டெக்னிக் போதும்!!
ஒரிஜினல் கருப்பட்டியை கண்டுபிடிப்பது எப்படி?
- கருப்பட்டியை கடித்து சாப்பிடும் போது அதன் சுவையானது கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருந்தால் அது ஒரிஜினல் கருப்பட்டி என்று அர்த்தம்.
- கருப்பட்டியை உடைத்து பார்த்தால் அதன் உள்பகுதி கருப்பு மற்றும் பழுப்பு கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். அதுவே போலி கருப்பட்டியின் உட்புறமானது பளபளப்பாக இருக்கும்.
- கருப்பட்டியை கடையில் வாங்கி வைத்திருக்கும் போது சில நாட்கள் அல்லது வாரங்களில் கழித்து அது இளக ஆரம்பித்தால் அது போலி கருப்பட்டி என்று அர்த்தம். அதுவே கல்லு மாதிரி அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்தால் அதுதான் உண்மையான கருப்பட்டி.
இதையும் படிங்க: பன்னீரில் கூட கலப்படமா? ஒரிஜினலை கண்டுப்பிடிக்க நச்சுனு நாலு டிப்ஸ்..!!
கருப்பட்டி:
- கருப்பட்டி வாங்கி நாட்களாகி விட்டால் அதன் மேல் புள்ளி புள்ளியாக தோன்றும் அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. ஏனெனில் பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால் இந்த புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். அதுவே போலி கருப்பட்டியில் புள்ளிகள் ஏதும் வராது.
- ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு கருப்பட்டியை போடுங்கள். அரை மணி நேரத்திலேயே அது கரைந்து விட்டால் அது போலியான கருப்பட்டி என்று அர்த்தம். அதுவே ஒரு மணி நேரம் ஆகியும் கரையவில்லை என்றால் அது ஒரிஜினல் கருப்பட்டி.
- கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டி பாருங்கள். அதன் சத்தம் மிதமாக கேட்டால் அது ஒரிஜினல் கருப்பட்டி. அதுவே சத்தம் அதிகமாக கேட்டால் அது போலி என்று அர்த்தம்.
- கருப்பட்டியை கையில் எடுத்து பார்க்கும்போது அதில் பளபளப்பு ஏதும் இல்லாது இருந்தால் அது ஒரிஜினல் தான். அதுவே அதைத் தொட்ட பிறகு கையில் வெள்ளையாக ஒட்டிக்கொண்டால் அது போலியானது.