பன்னீரில் கூட கலப்படமா? ஒரிஜினலை கண்டுப்பிடிக்க நச்சுனு நாலு டிப்ஸ்..!!
Fake Paneer Identification : நீங்கள் வாங்கும் பன்னீர் ஒரிஜினலா அல்லது போலியானதா என்பதை கண்டுப்பிடிக்க சில குறிப்புகள் இங்கே.

பன்னீரில் கூட கலப்படமா? ஒரிஜினலை கண்டுப்பிடிக்க நச்சுனு நாலு டிப்ஸ்..!!
இந்திய உணவில் பன்னீர் ஒரு முக்கிய பகுதியாகும். அதுவும் குறிப்பாக, பன்னீர் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். இதைக் கொண்டு பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிடலாம். பன்னீர் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் அதிகளவு புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. இதன் தேவை அதிகம் காரணமாக கடைக்காரர்கள் பெரும்பாலும் பல்வேறு கலப்படங்களுடன் பன்னீரை சந்தையில் விற்கிறார்கள். இதனால் நீங்கள் வாங்கி சாப்பிடும் பன்னீர் உண்மையானதா அல்லது போலியானது என்பதே உங்களால் கண்டுபிடிக்க முடியாது. கலப்படம் செய்யப்பட்ட பனீர் விசித்திரமான சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த பதிவில் நீங்கள் வாங்கும் பன்னீர் ஒரிஜினலா அல்லது கலப்படம் செய்யப்பட்டதா என்பதை எளிதாக கண்டறிய சில குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
பன்னீர் சுவை :
உண்மையான பன்னீர் கொஞ்சம் கிரீமி சுவையுடன் இருக்கும். அதுவே கலப்படம் செய்யப்பட்ட பன்னீரானது வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். உண்மையில் பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் அதற்கு பாலின் சுவை மட்டுமே இருக்கும். அதுதான் ஒரிஜினல்.
பன்னீர் அமைப்பு:
ஒரு சிறிய பன்னீர் துண்டை எடுத்து உங்கள் கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். அது நொறுங்கி போனால் அது போலி என்று அர்த்தம். ஏனெனில் உண்மையான பன்னீர் அவ்வளவு நொறுங்கியது அல்ல.
பன்னீர் மென்மை:
போலி பன்னீர் அமைப்பு சற்று கடினமாகவும் ,ரப்பர் போன்றதாகவும் இருக்கும். அதே சமயம் உண்மையான பன்னீர் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும் இருக்கும். எனவே நீங்கள் வாங்கும் போது அதை லேசாக அழுத்தி பார்ப்பதன் மூலம் அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
இதையும் படிங்க: பன்னீரில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்.. ரெசிபி இதோ!
நீரில் சோதனை:
பன்னீரை நீரில் போட்டு உண்மையானது அல்லது போலியானது என்பதை கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு பன்னீரை போடுங்கள். அது கரைய ஆரம்பித்தாலோ அல்லது அதிலிருந்து வெள்ளை நுரை வர ஆரம்பித்தால் அது போலியானது என்று அர்த்தம். ஏனெனில் உண்மையான பன்னீர் தண்ணீரில் கரையாது மற்றும் நுரை வராமல் மிதக்கும்.
இதையும் படிங்க: குட்டீஸ்க்கு பிடிச்ச பன்னீர் பிரெட் பால்.. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு செஞ்சு கொடுங்க!
பேக் செய்யப்பட்ட பன்னீரில் உள்ள பொருட்கள்:
நீங்கள் சந்தையில் இருந்து பேக் செய்யப்பட்ட பன்னீர் வாங்க போனால் அதை வாங்கும் முன் பேக்கேஜில் எழுதப்பட்டு விவரங்களை படியுங்கள். ஏனெனில், உண்மையான பன்னீர் பால், எலுமிச்சை சாறு மற்றும் வினிகரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதனுடன் தனியாக எதுவும் சேர்க்கப்பட்டிருக்காது. ஆனால் அதனுடன் வேறு ஏதாவது பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது போலி. எனவே, அதை வாங்காமல் இருப்பது தான் நல்லது.