MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பளபளக்கும் மாம்பழங்கள் உயிருக்கு ஆபத்து.! ரசாயன மாம்பழங்களை வீட்டிலேயே கண்டறிய 5 எளிய வழிகள்.!

பளபளக்கும் மாம்பழங்கள் உயிருக்கு ஆபத்து.! ரசாயன மாம்பழங்களை வீட்டிலேயே கண்டறிய 5 எளிய வழிகள்.!

How to Identify Chemically Ripened Mangoes : மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் சந்தைகளில் கலப்பட மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. கலப்பட மாம்பழங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? அதை சாப்பிட்டால் வரும் பின் விளைவுகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 30 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
How to Identify Chemically Ripened Mangoes
Image Credit : Chat GPT

How to Identify Chemically Ripened Mangoes

கோடை காலம் தொடங்கி விட்டாலே மாம்பழ சீசனும் தொடங்கி விடும். சந்தைகளில் தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதே சமயம் மாம்பழங்களை சீக்கிரம் பழுக்க வைப்பதற்காக கால்சியம் கார்பைடு, எத்திலீன் ஆக்சைடு போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்கள் பழக்க வைக்கப்படுகின்றன. இந்த மாம்பழங்களை சாப்பிடுவது உணவு நஞ்சு, வயிற்று வலி, புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ரசாயன மாம்பழங்களை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
1. தண்ணீரில் போட்டுப் பார்த்தல்
Image Credit : Chta GPT

1. தண்ணீரில் போட்டுப் பார்த்தல்

மாம்பழங்களை வாங்கி வந்த உடனேயே அதை அப்படியே சாப்பிடுதல் கூடாது. முதலில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மாம்பழங்களை போட வேண்டும். இயற்கையாக பழுத்த பழம் கனமாக இருக்கும். எனவே அது தண்ணீருக்குள் மூழ்கிவிடும். அதே சமயம் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் லேசாக இருக்கும். அவை தண்ணீரின் மேலே மிதக்கும். இது மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான முறையாகும்.

Related Articles

Related image1
நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
Related image2
ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!
37
2. நிறத்தை கவனித்தல்
Image Credit : Asianet News

2. நிறத்தை கவனித்தல்

பழங்களின் நிறங்களை கவனிக்க வேண்டும். இயற்கையாக பழுத்த பழங்களில் பழம் முழுமையாக ஒரே சீரான மஞ்சளாக இருக்காது. ஆங்காங்கே பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்து காணப்படும். செயற்கையான பழமாக இருந்மால் பழம் முழுவதுமே பளபளப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் பழம் மஞ்சளாக இருந்தாலும், அதன் காம்புப் பகுதி மட்டும் பச்சையாகவே இருக்கும். பளபளப்பாக கண்களை கவரும் விதத்தில் இருந்தால் அந்த பழங்களை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம்.

47
3. பழத்தின் தோல் மற்றும் அமைப்பு
Image Credit : Getty

3. பழத்தின் தோல் மற்றும் அமைப்பு

இயற்கையாக பழுத்த பழங்களில் பழத்தின் தோல் சற்று சுருக்கங்களுடன் அல்லது மென்மையாக இருக்கும். அழுத்திப் பார்த்தால் சீராக அமுங்கும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களில், பழம் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால், தொட்டுப் பார்த்தால் சில இடங்கள் கல்லுப் போலக் கடினமாகவும், சில இடங்கள் மிக மென்மையாகவும் இருக்கும்.

57
4. வாசனை
Image Credit : Asianet News

4. வாசனை

இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தை முகர்ந்து பார்த்தால் ஒருவித இனிமையான நறுமணம் வீசும். கார்பைடு மூலம் பழுத்த பழங்களில் அந்த மணம் இருக்காது. மாறாக ஒருவித நெடியான வாசனை அல்லது மருந்தின் மணம் வரலாம்.

67
5. வெட்டிப் பார்த்தல்
Image Credit : Istocks

5. வெட்டிப் பார்த்தல்

இயற்கையாக பழுத்த பழத்தை வெட்டினால் உள்ளே இருக்கும் சதைப்பகுதி அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இரசாயனம் கலந்த பழங்கள் வெளியே மஞ்சள் நிறமாக இருந்தாலும், உள்ளே வெட்டும்போது சதைப்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் (சரியாகப் பழுக்காதது போல) இருக்கும்.

77
முக்கிய எச்சரிக்கை:
Image Credit : Freepik

முக்கிய எச்சரிக்கை:

ஒருவேளை நீங்கள் வாங்கிய பழம் செயற்கையானது என சந்தேகித்தால், அதைச் சாப்பிடுவதற்கு முன் குறைந்தது 15-20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு கழுவிய பின் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுங்கள். இது பழத்தின் மேல் ஒட்டியுள்ள இரசாயனங்களின் வீரியத்தைக் குறைக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bird House Balcony: உங்க பால்கனி ஒரு மினி கார்டனா மாறணுமா? இதோ 5 க்யூட் 'பேர்ட்ஸ் ஹவுஸ்' டிசைன்கள்!
Recommended image2
Mehndi : குழந்தைகளுக்கான அழகான மற்றும் எளிமையான 7 மெஹந்தி டிசைன்கள்!
Recommended image3
Surprise Spots: கோவா ரியல் பியூட்டி இதுல தான்! இந்த Unseen லொக்கேஷன்ஸ் செம!
Related Stories
Recommended image1
நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
Recommended image2
ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved