- Home
- Lifestyle
- Bathroom Cleaning: இனி பாத்ரூமில் பூஞ்சை தொல்லையே இருக்காது! 5 நிமிடத்தில் பளபளப்பாக்க இந்த சூப்பர் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Bathroom Cleaning: இனி பாத்ரூமில் பூஞ்சை தொல்லையே இருக்காது! 5 நிமிடத்தில் பளபளப்பாக்க இந்த சூப்பர் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
குளியலறையில் எப்போதும் நீடிக்கும் அதிக ஈரப்பதம் காரணமாக, டைல்ஸ் இடுக்குகளில் கறுப்பு அல்லது பச்சை நிறப் பூஞ்சைகள் எளிதில் வளர ஆரம்பிக்கும். இவற்றை முழுமையாக நீக்கி, உங்கள் பாத்ரூமை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
வீடு முழுவதும் ஃபிரெஷ்ஷான உணர்வு
பாத்ரூம் எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருந்தால், வீடு முழுவதுமே ஒரு புத்துணர்ச்சியான சூழல் உருவாகும். ஆனால், குளியலறையில் எப்போதும் நீடிக்கும் அதிக ஈரப்பதம் காரணமாக, டைல்ஸ் இடுக்குகளில் கறுப்பு அல்லது பச்சை நிறப் பூஞ்சைகள் எளிதில் வளர ஆரம்பிக்கும். இவற்றை முழுமையாக நீக்கி, உங்கள் பாத்ரூமை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவும் சில எளிய டீப் கிளீனிங் குறித்து இங்கே பார்க்கலாம்.
குளித்ததும் சுவர்களைத் துடைப்பது
குளித்து முடித்ததும் டைல்ஸ் மற்றும் கண்ணாடியில் இருக்கும் தண்ணீரை அப்படியே விடாதீர்கள். வைப்பர் அல்லது ஒரு மெல்லிய துணியால் சுவர்களைத் துடைத்துவிடுங்கள். தண்ணீர் கறைகளும் சோப்புப் பிசுக்கும் டைல்ஸில் படியாமல் தடுக்கப்பட்டு பூஞ்சை உருவாவது ஆரம்பத்திலேயே தவிர்க்கப்பட்டு டைல்ஸையும் பளபளப்பாக வைத்திருக்கும்.
வினிகர் மேஜிக்
டைல்ஸ் மற்றும் அதன் இடுக்குகளில் ஏற்கனவே பூஞ்சை படர்ந்திருந்தால், கெமிக்கல் கிளீனர்களுக்குப் பதிலாக வினிகரைப் பயன்படுத்தலாம். அதாவது தண்ணீரும் வினிகரும் ஒரே அளவாக கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதை பூஞ்சை உள்ள இடங்களில் ஸ்பிரே செய்து, 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு பின்னர் தேய்த்துக் கழுவினால், கறைகளும் கிருமிகளும் காணாமல் போய்விடும். டைல்ஸ் மீண்டும் பளபளப்பாகும்.
காற்றோட்டத்தை அதிகரியுங்கள்
பாத்ரூமிற்குள் நீராவி மற்றும் ஈரப்பதம் தேங்கி நிற்பதுதான் பூஞ்சை வளர்வதற்கு முக்கியக் காரணம். எனவே, குளித்த பின்பு பாத்ரூம் ஜன்னல் அல்லது கதவைச் சிறிது நேரம் திறந்து வையுங்கள். உங்கள் பாத்ரூமில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அதை ஆன் செய்யுங்கள். இதனால் ஈரப்பதம் சீக்கிரம் காய்ந்து, பூஞ்சை வளராாமல் தடுக்கப்படும்.
டைல்ஸ் இடுக்குகளைப் பராமரியுங்கள்
டைல்ஸ்களுக்கு இடையிலான இடுக்குகளில் தான் அழுக்கு அதிகமாக சேரும். வருடத்திற்கு ஒருமுறை இந்த இடுக்குகளை சுத்தம் செய்து, மீண்டும் ஒயிட் சிமெண்ட் அல்லது கிரவுட் சீலர் கொண்டு அடைத்துவிடுங்கள். இது பூஞ்சையைத் தடுப்பதுடன், சுவர்களில் நீர் கசிவதையும் தடுக்கும்.
அலட்சியம் வேண்டாம்
உங்கள் பாத்ரூமில் ஒருவேளை பூஞ்சை அதிகமாகப் பரவி, வீடு முழுவதும் பரவும் அபாயம் இருந்தால், உடனடியாக கிளீனிங் நிபுணர்களை அழைத்து சுத்தம் செய்யுங்கள். பூஞ்சையால் சுவாசப் பிரச்சனைகளும், பிரச்சனைகளையும், அலர்ஜியையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

