Prawn Pepper Fry : ருசினாயன ''இறால் பெப்பர்'' ப்ரை செய்வது எப்படி?
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். நம் எலும்புகளை பாதுகாக்கும் சுவையான பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்
சுத்தமாக கழுவிய இறால் 250 கிராம்
4 பச்சை மிளகாய்
25 கிராம் இஞ்சி
25 கிராம் பூண்டு
ஒரு வெங்காயம்
சிறிது கருவேப்பிலை
ஒரு ஸ்பூன் மிளகு தூள்
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முன்னதாக இறாலை நன்கு கழுவி சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் இட்டு ஓரளவுக்கு அரைத்து எடுத்து, அதனை தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு, அதில் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதோடு, ஊற வைத்துள்ள இறாலை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேவையான அளவு உப்பு லேசாக தூவி, பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடங்கள் நன்கு பிரட்டி விட வேண்டும். பின்னர், கொஞ்சம் ஆறவிட்டு எடுத்து பரிமாரினால் ருசியான இறால பெப்பர் ஃப்ரை ரெடி!
இந்த இறால் பெப்பர் ஃப்ரையை, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையான சுவையாக இருக்கும்.
Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?