MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Lifestyle
  • 10 நிமிடத்தில் பஞ்சு மாதிரியான இடியாப்பம்! - செய்வது எப்படி?

10 நிமிடத்தில் பஞ்சு மாதிரியான இடியாப்பம்! - செய்வது எப்படி?

ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகைதான் இந்த இடியாப்பம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Sep 08 2022, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகைதான் இந்த இடியாப்பம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ பச்சரிசி

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு தண்ணீர்

ஓரிரண்டு ஸ்பூன் எண்ணெய்
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

செய்முறை

ஒரு கிலோ பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேல் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விட்டு, ஒரு மெல்லிய பருத்தி துணியில் அரிசியை போட்டு காற்றில் உலர வைக்க வேண்டும். பிறகு இந்த அரிசி லேசான ஈரப்பதம் இருக்கும் போதே நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

மாவை ஒரு பெரிய கடாயில் கொட்டி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். மாவை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். மாவின் தூள்கள் வெளியே தெரிக்க ஆரம்பித்தால் மாவில் உள்ள ஈரப்பதம் நீங்கி விட்டது என அர்த்தம். பின்னர், வேறொரு பாத்திரத்தில் அந்த மாவை கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும். பிறகு சல்லடையில் அந்த மாவை கொட்டி நைசாக சலித்து கொள்ள வேண்டும்.

35

இவ்வாறு, மாவை தயார் செய்து கொண்ட பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் இந்த இடியாப்ப மாவை போட்டு பிசைய வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 

45

அடுப்பில், இட்லி குண்டானில் சிறிது தண்ணீர் ஊற்றி, குண்டாவை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின்னர், பிசைந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை, முறுக்கு பிழியும் உபகரணத்தில், இடியாப்ப அச்சு தட்டை வைத்து, அதனுள் இந்த மாவு கலவையை போட்டு, இட்லி தட்டில் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 

55

அடுப்பில் இருக்கும் இட்லி குண்டவாவின் மூடியை திறந்து, அதில் மாவு பிழியப்பட்ட இட்லி தட்டுகளை வைத்து மூட வேண்டும். 15 - 20 நிமிடங்கள் வரை அவித்து எடுத்தால் சுவையான இடியாப்பம் தயார். இதனுடன், சர்க்கரை, பால் அல்லது தேங்காய் சட்னி அல்லது வேறு ஏதேனும் சட்னி, குழம்பு வகைகளுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Stove Cleaning: கேஸ் ஸ்டவ்வின் இந்த பாகத்தை மறந்தா பெரிய ஆபத்து! இனிமே இப்படி கிளீன் பண்ணுங்க!
Recommended image2
Anklet Designs: கலர்ஃபுல் பீட்ஸ் கொலுசுகள்... அசத்தலான லுக் இனி உங்களுக்கும்!
Recommended image3
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved