- Home
- Lifestyle
- Washing Machine Cleaning: மெக்கானிக் எதுக்கு? வாஷிங் மெஷினை நீங்களே ஈஸியா கிளீன் பண்ணலாம்!
Washing Machine Cleaning: மெக்கானிக் எதுக்கு? வாஷிங் மெஷினை நீங்களே ஈஸியா கிளீன் பண்ணலாம்!
துணி துவைக்கிற உங்க வாஷிங் மெஷின்ல இருந்தே ஒரு மாதிரி கெட்ட வாடை வருதா? சோப்பு அழுக்கு, பாக்டீரியா, பூஞ்சை எல்லாம் சேர்ந்துதான் காரணம். வினிகர், பேக்கிங் சோடா மாதிரி வீட்ல இருக்குற பொருட்களை வெச்சே இதை சரிசெய்து, மெஷினோட ஆயுளை அதிகரிக்கலாம்.
17

Image Credit : Getty
வாஷிங் மெஷின் கிளீனிங்
இப்போல்லாம் பெரும்பாலான வீடுகள்ல வாஷிங் மெஷின் ஒரு அத்தியாவசிய பொருளாகிடுச்சு. ஆனா, துணிகளை பளிச்சுனு ஆக்குற இந்த மெஷினுக்குள்ளேயே சோப்பு நுரை, துணி அழுக்கு, ஈரம் எல்லாம் சேர்ந்து பாக்டீரியா, பூஞ்சை வளர ஆரம்பிக்கும். இதனால துணிகள்ல கெட்ட வாடை வர்றது மட்டுமில்லாம, மெஷினோட ஆயுசும் குறையும். கரண்ட், தண்ணி செலவும் அதிகமாகும். தேவையில்லாம ரிப்பேர் செலவு வைக்காம, வீட்ல இருக்குற பொருட்களை வெச்சே வாஷிங் மெஷினை எப்படிப் புதுசு போல மாத்துறதுன்னு பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
27
Image Credit : Asianet News
டிரம் டீப் கிளீனிங்
துணிகள்ல இருந்து வர்ற எண்ணெய் பிசுக்கு, அழுக்கு எல்லாம் மெஷின் டிரம்ல தங்கிடும். மெஷின் காலியா இருக்கும்போது, 'Hot Water' மோடுக்கு செட் பண்ணுங்க. சோப்பு போடுற ட்ரே-ல ரெண்டு கப் வினிகர் ஊத்தி மெஷினை ஆன் பண்ணுங்க. வினிகர் உள்ளே இருக்குற பாக்டீரியாவை அழிச்சிடும். தண்ணி நிறைஞ்சதும் மெஷினை பாதியிலேயே நிறுத்தி, அரை கப் பேக்கிங் சோடாவை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடுங்க. அப்புறம், வாஷ் சைக்கிளை முழுசா ஓட விடுங்க. இது கெட்ட வாடையை முழுசா நீக்கிடும்.
37
Image Credit : Asianet News
டிடர்ஜென்ட் டிராயர் கிளீனிங்
நாம சோப்பு பவுடர் அல்லது லிக்விட் ஊத்துற டிராயர்லதான் அதிகமா பாசி, அழுக்கு சேரும். இந்த டிராயரை லேசா அழுத்தினா வெளியே வந்துடும். அதை எடுத்து, சூடான சோப்புத் தண்ணியில ஒரு 20 நிமிஷம் ஊற வைங்க. அப்புறம், பழைய டூத் பிரஷ் வெச்சு மூலை முடுக்குல இருக்குற அழுக்கை நல்லா தேய்ச்சு கழுவுங்க. கடைசியா ஒரு துணியால துடைச்சுட்டு மறுபடியும் மெஷின்ல மாட்டிடுங்க.
47
Image Credit : Getty
ரப்பர் கேஸ்கெட் கிளீனிங்
பிரன்ட் லோட் மெஷின்கள்ல, கதவைச் சுத்தி இருக்குற ரப்பர் மடிப்புகள்ல தண்ணி தங்கி, கறுப்புப் புள்ளிகள் மாதிரி பூஞ்சை பிடிக்கும். வினிகரையும் தண்ணீரையும் கலந்த சொல்யூஷன்ல ஒரு துணியை நனைச்சு, இந்த ரப்பர் மடிப்புகளை நல்லா துடைச்சு எடுங்க. கரை ரொம்ப அதிகமா இருந்தா பிரஷ் பயன்படுத்தலாம்.
57
Image Credit : Getty
டிரெயின் பம்ப் ஃபில்டர்
வாஷிங் மெஷினோட முன்பக்கத்துல கீழ ஒரு சின்னக் கதவு மாதிரி இருக்கும். அதுக்குள்ளதான் எல்லா குப்பையும் சேரும். அதைத் திறக்கும்போது தண்ணி வெளியே வரும், அதனால கீழ ஒரு தட்டு இல்லைன்னா துணியை வெச்சுக்கோங்க. அந்த மூடியைத் திறந்து, உள்ளே சிக்கியிருக்கிற நாணயம், முடி, பட்டன், நூல் போன்ற அடைப்புகளை நீக்குங்க. இதை 2-3 மாசத்துக்கு ஒரு தடவையாவது கண்டிப்பா சுத்தம் செய்யணும்.
67
Image Credit : Getty
மெஷின் ஆயுளை அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்
மெஷினோட கொள்ளளவை விட அதிகமா துணிகளைத் திணிக்காதீங்க. இது மோட்டாரை சீக்கிரம் பழுதாக்கிடும். துணி துவைச்சதும், மெஷின் கதவை உடனே மூடாதீங்க. ஒரு அரை மணி நேரம் திறந்து வெச்சா, உள்ள காத்தோட்டமா இருந்து பூஞ்சை பிடிக்காது. வாஷிங் மெஷினுக்காகவே தயாரிக்கப்பட்ட HE (High Efficiency) லிக்விட் அல்லது பவுடரை மட்டும் பயன்படுத்துங்க. சாதாரண சோப்புத் தூள் அதிக நுரையை உண்டாக்கி மெஷினை சேதப்படுத்தும்.
77
Image Credit : Getty
எப்போது மெக்கானிக்கை அழைக்க வேண்டும்?
மெஷின்ல இருந்து திடீர்னு வித்தியாசமா பெரிய சத்தம் வர்றது, ஷாக் அடிக்கிற மாதிரி உணர்வு, அல்லது மெஷினுக்கு அடியிலிருந்து தண்ணி கசியறது போன்ற டெக்னிக்கல் பிரச்சனைகள் வந்தா, நீங்களே சரிசெய்ய முயற்சிக்காதீங்க. உடனே ஒரு திறமையான மெக்கானிக்கை கூப்பிடுறதுதான் நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

