1 எலுமிச்சை போதும்! மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் வாளி, கப் ஈசியா சுத்தம் செய்யலாம்
பாத்ரூமில் இருக்கும் கப் மற்றும் வாளியில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை சுலபமாக நீக்குவது எப்படி என்று காணலாம்.

1 எலுமிச்சை போதும்! மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் வாளி, கப் ஈசியா சுத்தம் செய்யலாம்
வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது குளிக்கும் அறையும் சுத்தமாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம். பாத்ரூம் அழுக்காக இருந்தால் கிருமிகள் விரைவாகவே இனப்பெருக்கம் செய்து வீட்டில் உள்ளவர்களை நோய்வாய்ப்படும். சிலர் பாத்ரூமில் தரை, சுவர் மற்றும் பைப்பை கூடை சுத்தம் செய்வார்கள். ஆனால் குளிப்பதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாளி மற்றும் கப்பை சுத்தம் செய்ய மறந்து விடுவார்கள்.
பிளாஸ்டிக் வாளி மற்றும் கப்பை சுத்தம் செய்ய
பாத்ரூமில் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் அடிக்கடி பிளாஸ்டிக் வாளி மற்றும் கப் பயன்படுத்தப்படுவதால் சீக்கிரமாகவே அழுக்காகிவிடும். கப் மற்றும் வாளிகளில் பிடிவாதமான உப்புக்கறை படிந்து படிப்படியாக அது மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில், அழுக்கு படிந்த கப் மற்றும் வாளியை பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். வாளி மற்றும் கப்பில் படிந்துள்ள பிடிவாதமான மஞ்சள் கறையை நீக்கி, புத்தம் புதியது போல் ஜொலிக்க செய்யலாம்.
இதையும் படிங்க: வெறும் 10 ரூபாய் மட்டும் செலவு செஞ்சா போதும்... உங்க வீட்டு பாத்ரூம் பளபளக்கும்...!!
சோடா மற்றும் எலுமிச்சை
பாத்ரூமில் இருக்கும் பிளாஸ்டிக் கப் மற்றும் வாளியை சுத்தம் செய்ய சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை கொண்டு ஒரு கரைசலை உருவாக்கி, அதை அழுக்காக இருக்கும் வாளி மற்றும் கப்பில் தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு ஒரு ஸ்கிரப் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் வாளி மற்றும் கப்பில் படிந்து இருக்கும் மஞ்சள் கறை முற்றிலுமாக நீங்கி புதியது போல் ஜொலிக்கும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துபவரா நீங்கள்! தப்பி தவறி கூட இந்த தப்பை செய்திடாதீங்க!
ஈனோ மற்றும் எலுமிச்சை
பிளாஸ்டிக் வாளி மற்றும் கப்பில் உப்பு கரை விடாப்பிடியாக இருந்தால் அவற்றை சுத்தம் செய்ய ஈனோ மற்றும் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கப்பில் ஈனோ மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை நன்றாக கலந்து அந்த பேஸ்ட்டை ஒரு பிரஷ் அல்லது ஸ்க்ரப் கொண்டு அழுக்கு படிந்த வாளி மற்றும் கப்பில் உள்ளே மற்றும் வெளியே தடவவும். சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஒரு பிரஷ் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி செய்தால் வாளி மற்றும் கப்பில் படிந்து இருக்கும் மஞ்சள் கறை முற்றிலும் நீங்கிவிடும்.