வாஷ் பேஷன் கழுவ இந்த 2 பொருள் போதும் .. ஈஸியா கிளீன் பண்ணலாம்!
சிங்க் மற்றும் வாஷ் பேஷனை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Sink and Wash Basin Cleaning Tips : ஒவ்வொருவரும் தங்களது வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். தரையை தூத்துப் பெருக்கி சுத்தம் செய்வது ரொம்பவே ஈஸி. ஆனால் வீட்டில் சில இடங்களை சுத்தம் செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
வீட்டின் குளியலறையில் இருக்கும் வாஷ்பேஷன் மற்றும் சமையலறை சிங்க் தண்ணீர் பாயும் இடம் என்பதால் அதில் பல்வேறு வகையான அழுக்குகள், பாசிகள் குவிந்து காணப்படும். இதன் குழாயை சுத்தம் செய்வது ரொம்பவே கடினம். அதுவும் குறிப்பாக தினமும் இவற்றை சுத்தம் செய்வது யாராலும் முடியாது.
வாஷ்பேஷன் மற்றும் சிங்க் அதிகமாக பயன்படுத்தப்படும் இடம். எனவே அவற்றின் குழாய்கள் சீக்கிரமாகவே அழுக்காவது இயல்பு. எனவே அவற்றை சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினம். ஆனால் நீங்கள் இந்த இரண்டு பொருட்களை வைத்து முயற்சிக்கலாம்.
அதாவது வாஷ்பேஷன் மற்றும் சிங்கின் அடிப்பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் குழாய் மெல்லியதாகவும், மென்மையாகவும் இருக்கும். அந்த குழாயை தேய்த்து கழுவினால் அதன் ஆயுட்காலம் குறைந்து விடும் மற்றும் விரைவில் உடைந்து விடும். மேலும் அதை தினமும் அகற்றி சுத்தம் செய்தால் உடையும் அபாயம் ஏற்படும்.
வாஷ்பேஷன் மற்றும் சிங்க் குழாய் நீண்ட நாள் சுத்தமாக இருக்கவும், நீடிக்கவும் அலுமினிய ஃபாயில் பயன்படுத்தலாம். இதற்கு முதலில், குழாயின் அளவிற்கு ஃபாயிலை வெட்டுங்கள். பிறகு அதை உருட்டவும். இப்போது குழாயை சுற்றி ஃபாயில்லை 2-3 முறை சுற்றி மூடவும். இப்போது உங்களது குழாய் ஃபாயில் கவரால் பாதுகாப்பாக இருக்கும்.
ஃபாயில் பேப்பரை தவிர குழாய்கள் அழுக்காகாமல் இருக்க சைக்கிள் டயரை பயன்படுத்தலாம். இது கடினமாக இருந்தாலும், மிகவும் பயனுள்ளது இது குழாய்களை நீண்ட நாள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். இதற்கு முதலில் பைப்பை அகற்றி, பைப் அளவில் டயரை வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு பைபிள் டயர வைத்து மாட்டவும். இப்போது உங்களது சிங்க் மற்றும் வாஷ்பேஷன் குழாய் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.