அழுக்கு ஸ்விட்ச் போர்டு... இனி 5 நிமிடத்தில் புதுசு போல மாத்தலாம்!
தினமும் பயன்படுத்தும் ஸ்விட்ச் போர்டுகளில் உள்ள அழுக்குகளை நீக்குவது பெரிய வேலை என நினைக்கிறோம். ஆனால், வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சிரமமின்றி, வெறும் 5 நிமிடங்களில் அதை சுத்தமாக்கி, எப்போதும் புதுசு போல் பளபளக்க வைக்க முடியும்!

முதல்ல இதை செய்யுங்க
சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யுறதுக்கு முன்னாடி, வீட்டோட மெயின் ஸ்விட்ச் அல்லது எம்.சி.பி-யை (MCB) ஆஃப் பண்ணிடுங்க. கால்ல கண்டிப்பா செருப்பு போட்டிருக்கணும். பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!
நெயில் பாலிஷ் ரிமூவர் மேஜிக்
கொஞ்சமா காட்டன் (பஞ்சு) எடுத்து, அதில் நெயில் பாலிஷ் ரிமூவரை (Acetone) நனைச்சுக்கோங்க. சுவிட்ச் போர்டு மேல் லேசா தேய்ச்சாலே போதும்... எப்பேர்ப்பட்ட பிசுபிசுப்பான கறையும் பஞ்சாய் பறந்துடும்!
ஷேவிங் ஃபாம் ட்ரிக்
ஆண்கள் தாடி வடிக்கப் பயன்படுத்தும் 'ஷேவிங் ஃபாம்' (Shaving Foam) ஒரு சூப்பர் கிளீனர். பழைய டூத் பிரஷ்ஷில் கொஞ்சமாக ஃபாம் எடுத்து சுவிட்சுகள் மீது தேய்த்து, காய்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மாறும். தண்ணீர் தேவையே இல்லை!
பென்சில் ரப்பர் போதும்!
சுவிட்ச் போர்டை சுத்தி கறுப்பா விரல் ரேகை படிஞ்சிருக்கா? தண்ணி, லிக்விட் எதுவுமே வேண்டாம். குழந்தைகள் பயன்படுத்தும் சாதாரண 'பென்சில் ரப்பரைக்' கொண்டு அந்த கறைகளின் மேல் தேய்த்தால், அழுக்கு அப்படியே உதிர்ந்துடும்!
ஹேர் ஸ்ப்ரே-வில் இப்படியொரு ரகசியமா?
உங்க வீட்ல ஹேர் ஸ்ப்ரே (Hair Spray) இருந்தா, அதை ஒரு காட்டன் துணியில் ஸ்ப்ரே செய்து, சுவிட்ச் போர்டை துடையுங்கள். இது அழுக்கை நீக்குவதுடன், சீக்கிரத்தில் அடுத்த அழுக்கு படியாமல் ஒரு லேயர் போல பாதுகாக்கும்.
விடாப்பிடி கறைகளுக்கு எண்ட் கார்டு!
ரொம்ப வருஷமா பல்லி எச்சம், எண்ணெய் கறை படிந்த போர்டுகளுக்கு... எலுமிச்சை சாறில் கொஞ்சமா பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். பிரஷ்ஷால் தேய்த்து 2 நிமிடம் கழித்து காய்ந்த துணியால் துடைத்தால்... வாவ், புதுசு ரெடி!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

