MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gas Burner Cleaning: கேஸ் ரொம்ப செலவாகுதா? பர்னரை இப்படி சுத்தம் பண்ணுங்க.! 15 நாள் கேஸ் எக்ஸ்ட்ரா வரும்.!

Gas Burner Cleaning: கேஸ் ரொம்ப செலவாகுதா? பர்னரை இப்படி சுத்தம் பண்ணுங்க.! 15 நாள் கேஸ் எக்ஸ்ட்ரா வரும்.!

How to Clean Gas Stove Burners? : கேஸ் அடுப்பில் பர்னர்கள் அடைத்துக் கொண்டால் அவை சரியாக எரியாமல் போகலாம். இதனால் உணவு சமைக்க அதிக நேரம் எடுப்பதுடன், கேஸ் அதிக அளவில் வீணாகும். கேஸ் பர்னர்களை சுத்தம் செய்யும் முறைகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 21 2026, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
How to Clean Gas Stove Burners? Simple Methods
Image Credit : Getty

How to Clean Gas Stove Burners? Simple Methods

உலக அளவில் நிகழ்ந்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், எரிவாயு உள்ளிட்ட முக்கிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேஸ் அடுப்புகளை பயன்படுத்தி வருபவர்கள் அதை முறையாக பராமரிக்க விட்டால் உணவு சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதே சமயம் கேஸ் அதிக அளவு வீணாக்கப்படும். இதை தடுப்பது எப்படி? கேஸ் பர்னர்களை எவ்வாறு சுத்தம் செய்வது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பர்னர்களை சுத்தப்படுத்தும் முறைகள்
Image Credit : stockPhoto

பர்னர்களை சுத்தப்படுத்தும் முறைகள்

கேஸ் அடுப்புகளில் உள்ள பர்னர்களில் அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள் சேரும்பொழுது அதில் அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனால் கேஸ் சீராக வெளியாவது இல்லை. எனவே சமைக்கும் நேரம் அதிகரிப்பதுடன், அதிக காசும் செலவாகிறது. பர்னர்களை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டு, கேஸ் முழுமையாக எரியும். இதனால் சமையல் விரைவாக முடிவதுடன், ஒரு மாதத்திற்கு 15 நாட்கள் வரை கேஸ் சிலிண்டரை கூடுதலாக சேமிக்க முடியும். பர்னர்களில் படியும் எண்ணெய் பிசுக்குகளே அடைப்புக்கு முக்கிய காரணமாகிறது. எனவே எண்ணெய் பிசுக்குகளை நீக்க வேண்டியது அவசியம். கேஸ் பர்னர்களை சுத்தம் செய்யும் சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!

Related Articles

Related image1
Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!
Related image2
Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.! எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் கூறும் அறிவுரை.!
35
ஈனோ மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை
Image Credit : stockPhoto

ஈனோ மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் கேஸ் பர்னர்களை வைத்து அதில் சுடுதண்ணீரை ஊற்ற வேண்டும். இதில் ஒரு முழு எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் ஈனோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இதன் காரணமாக தண்ணீரானது சோடா போல பொங்கி வரும். இந்த கலவையில் இரவு முழுவதும் பர்னர்களை ஊறவிட்டு மறுநாள் காலை திறந்து பார்த்தால் நீரின் நிறம் மாறியிருக்கும். பர்னரில் இருந்த அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள் பிரிந்து பர்னர்கள் சுத்தமாக இருப்பதை உங்களால் காண முடியும். மறுநாள் காலை பர்ணர்களை வெளியில் எடுத்து சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!

45
பேக்கிங் சோடா மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை
Image Credit : stockPhoto

பேக்கிங் சோடா மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை

இந்த முறையில் ஒரு அகலமான மாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, பாத்திரம் தேய்க்கும் டிஷ்வாஷ் சோப்பையும் சேர்க்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாற்றை பிழியவேண்டும். இந்த கரைசலில் பர்னரை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் பழைய டூத் பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் வெளியே வந்துவிடும். பின்னர் சுத்தமான தண்ணீரில் பர்னர்களை கழுவி துணியால் துடைத்து, நன்கு உலர விட்டு அடுப்பில் பொருத்த வேண்டும். இல்லையென்றால் தீ சரியாக எரியாமல் போகலாம்.

LPG cylinder : கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதா? 20 நாள் எக்ஸ்ட்ரா வரணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க.!

55
உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்
Image Credit : Freepik

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்

ஒவ்வொரு மாதமும் பர்னர்களை இது போல ஆழமாக சுத்தம் செய்து கொள்வது நல்லது. இது பர்னர்கள் அடைபடுவதை தடுக்கும். உணவை விரைவாக சமைக்க முடியும். 15 நாட்கள் வரை கூடுதலாக உங்கள் சிலிண்டரை நீங்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் அடுப்பின் ஆயுளை நீட்டிப்பதோடு, உங்கள் சமையல் வேலையும் விரைவாக முடியும் .எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் சமையல் விரைவாக முடிவதுடன், உங்கள் பணமும் மிச்சமாகும். அடிக்கடி சிலிண்டர் வாங்கும் தேவையும் இருக்காது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
எரிவாயு உருளை
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
முத்து மற்றும் கண்ணாடி வேலைப்பாடு கொண்ட எழிலமிகு நூல் வளையல் டிசைன்கள்
Recommended image2
kitchen tips சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை குறைக்க 5 புதுமையான வழிகள்!
Recommended image3
Chilled Desserts: பக்ரீத் விருந்தை ஜில்லுனு மாத்த சூப்பரான 5 டெசர்ட்ஸ்!
Related Stories
Recommended image1
Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!
Recommended image2
Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.! எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் கூறும் அறிவுரை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved