ஏசி ஃபில்டரை ஒருபோதும் இப்படி சுத்தம் செய்யாதீங்க..! சேதமடையலாம்..!!
உங்கள் வீட்டில் இருக்கும் ஏர் கண்டிஷனரில் தூசி படிந்திருந்தால் சில பிரச்சினைகள் வர தொடங்கும். சில நேரங்களில் நாமே தவறான முறையில் அதனை சுத்தம் செய்கிறோம். ஆகையால் ஏசியை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருக்கும் ஏர் கண்டிஷனரை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். உங்கள் வீட்டிலும் ஏர் கண்டிஷனர் இருந்தால், நீங்களும் கண்டிப்பாக ஏசி ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் சுத்தம் செய்யும் போது அதனை தவறான முறையில் சுத்தம் செய்தால், ஏசி ஃபில்டர் சேதமடையலாம். ஏசி ஃபில்டரை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்து இப்போது பார்ப்போம்.
கடினமான பிரஷ் பயன்படுத்தக் கூடாது:
நீங்கள் ஒருபோதும் கடினமான பிரஷ் கொண்டு ஏசி ஃபில்டரை சுத்தம் செய்ய கூடாது. ஏசி ஃபில்டர் மிகவும் மெல்லியதாக இருக்கும். கடினமான பிரஷ் கொண்டு ஏசி ஃபில்டரை சுத்தம் செய்தால் ஏசி ஃபில்டர் சேதமடைய வாய்ப்பு அதிகம். எனவே ஏசி ஃபில்டரை மென்மையான பிரஷ் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.
நூல் துணி பயன்படுத்தாதீர்:
பலர் ஏசி ஃபில்டரை நூல் துணியால் சுத்தம் செய்கிறார்கள். நீங்களும் இதை செய்தால், இனிமேல் உங்கள் இந்த பழக்கத்திற்கு குட்பை சொல்லுங்கள். ஏனெனில் நூல் துணி ஏசி ஃபில்டரில் சிக்கிக்கொள்ளலாம். மேலும் அது ஏசி ஃபில்டரை சேதப்படுத்தும்.
இதையும் படிங்க: Broken glass: கை தவறி கண்ணாடி உடைந்துவிட்டதா? இனி தரையில் 1 துகள் கூட மிஞ்சாது.. சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்!!
சலவை சோப்பு உபயோகிக்காதீர்:
சலவை சோப்பு மூலம் ஏசி ஃபில்டரை சுத்தம் செய்தாலும் உங்கள் ஏசி சேதமடையலாம். ஏசி ஃபில்டரை சாதாரண தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஏசி ஃபில்டர் சேதமடையாது. குறிப்பாக ஏசி ஃபில்டரை தண்ணீருக்கு அடியில் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக எந்த ஒரு விஷயத்திலும் உதவி எடுக்க வேண்டாம்.
அதுபோல் சிறந்த காற்றோட்டம் மற்றும் குளிர்ச்சி பெற வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் ஏசி ஃபில்டர் சரியான முறையில் சுத்தம் செய்தால் உங்கள் ஏசி நல்ல முறையில் இயங்கும். விண்டோ ஏசி மற்றும் ஸ்பிளிட் ஏசி இரண்டிலும் ஃபில்டர் உள்ளதால், அதை முறையாக சுத்தம் செய்வது அவசியம்.