- Home
- Lifestyle
- Mirror Cleaning : உங்க வீட்டு கண்ணாடி ஒரே நிமிஷத்துல பளபளக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Mirror Cleaning : உங்க வீட்டு கண்ணாடி ஒரே நிமிஷத்துல பளபளக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
how to clean a mirror without leaving streaks : உங்கள் வீட்டில் கண்ணாடிகள் அழுக்காகிவிட்டதா, எவ்வளவு கழுவినా கரைகள் போகவில்லையா? இதோ எளிமையான வழிமுறை. ஒரே நிமிடம் போதும், உங்கள் வீட்டு குளியலறை பளபளவென்று மின்னும்.

how to clean a mirror without leaving streaks
வீடு அழகாக இருக்க, வீட்டிற்குள் இருக்கும் கண்ணாடியின் மீது கரைகளால் அழுக்குப்படிந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? பாத்ரூம் கண்ணாடிகள் மீது நுரை, கைரேகைகளால் முழு கண்ணாடியும் பாழாகிவிடும், என்ன செய்தாலும் பளபளவென்று மின்னும்படி செய்ய முடியாது. கண்ணாடியின் கீழ் விளிம்பில் கரைகள் கெட்டியாக அப்படியே இருக்கும். துணியால் நீங்கள் எவ்வளவு தேய்த்தாலும் பழையது போல புதிய கண்ணாடியைப் போல் மினுமினுக்காது. சுத்தப்படுத்தினாலும் கண்ணாடியில் முகம் மங்கலாகத் (Blur) தெரியும். அப்படியானால் கண்ணாடி பழையபடி மாற என்ன செய்ய வேண்டும்? இங்கே தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க : Cooking Oil : கடலை எண்ணெய் OR சூரியகாந்தி எண்ணெய்? - எதுல சமைப்பது பாதுகாப்பானது?
கண்ணாடியை துடைக்க சிறந்த துணி எது?
கண்ணாடியை சுத்தம் செய்ய சரியான துணியைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். சிலர் பழைய துணி அல்லது பேப்பரை பயன்படுத்துவார்கள். இது கண்ணாடியை சுத்தம் செய்தது போல தெரிந்தாலும், சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். அதனால், மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது சிறந்தது. இந்தத் துணி, கண்ணாடியில் உள்ள தூசி மற்றும் ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சிவிடும். மைக்ரோஃபைபர் துணி இல்லை என்றால், சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்தலாம். ஆனால், டிஷ்யூ பேப்பரை மட்டும் பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க :Rice Business : IT வேலையை உதறி அரிசி வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்!
அதிகமாக க்ளீனர் பயன்படுத்துவது நல்லதல்ல
கண்ணாடியை அடிக்கடி க்ளீனர் வைத்து சுத்தம் செய்ய வேண்டாம். அதிகப்படியான க்ளீனிங் லிக்விட் பயன்படுத்தினால், அது காய்ந்த பிறகு கண்ணாடியில் கோடுகள் அல்லது திட்டுக்கள் தெரியும். அதற்கு பதிலாக, க்ளீனரை நேரடியாக கண்ணாடியில் தெளிக்காமல், துணியில் தெளித்து சுத்தம் செய்யலாம்.
இதையும் படிங்க : Petrol : காலை நேரத்தில் பெட்ரோல் போட்டால் மைலேஜ் அதிகரிக்குமா? உண்மை என்ன?
வினிகர் மற்றும் தண்ணீர் கொண்டு க்ளீனர் தயாரிக்கலாம்
கடைகளில் விற்கும் விலை உயர்ந்த க்ளீனர்களுக்குப் பதிலாக, வீட்டிலேயே எளிதாக க்ளீனிங் சொல்யூஷன் தயாரிக்கலாம். சிறிதளவு வெள்ளை வினிகரை தண்ணீருடன் கலக்கவும். வினிகர், கண்ணாடியில் உள்ள பிசுக்கு மற்றும் கைரேகைகளை நீக்க சிறப்பாக உதவும். இந்த திரவத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது கண்ணாடியில் லேசாக ஸ்ப்ரே செய்து மைக்ரோஃபைபர் துணியால் துடைத்தால் போதும்.
இதையும் படிங்க : Attukal Paya : பாய் வீட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா செஞ்சு பாருங்க...அதோட சுவைக்கு நீங்க அடிமையாடுவீங்க!
வட்ட வடிவில் கண்ணாடியைத் துடைக்காதீர்கள்!
நிறைய பேர் செய்யும் தவறு, கண்ணாடியை வட்ட வடிவில் துடைப்பதுதான். இது சரியான முறை அல்ல. இப்படிச் செய்தால், அழுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவும். துடைத்த பிறகும் வட்டமான கறைகள் கண்ணாடியில் தெரியும். அதற்குப் பதிலாக, 'S' வடிவத்தில் கண்ணாடியைத் துடைப்பது முழுமையான சுத்தம் தரும். பிறகு, காய்ந்த மைக்ரோஃபைபர் துணியை வைத்து அதே 'S' வடிவத்தில் துடைத்தால், கண்ணாடி புதுசு போல பளபளக்கும்.
இதையும் படிங்க : Drishti Dosha : கண் திருஷ்டியால் அதிகம் பாதிக்கப்படும் 5 ராசிகள்! கவனமா இருங்க!
கண்ணாடியின் ஓரங்களை சுத்தம் செய்ய மறக்காதீங்க
கண்ணாடியை சுத்தம் செய்யும்போது, வினிகர் அல்லது தண்ணீர் வழிந்து அதன் ஓரங்களில் தங்கிவிடும். அதனால், கடைசியாக கண்ணாடியின் ஓரங்களை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இந்த திரவத்தை அப்படியே விட்டால், அது காய்ந்து புதிய கறைகளை உருவாக்கலாம். அதனால், முழு கண்ணாடியையும் சுத்தம் செய்த பிறகு, அதன் ஓரங்களையும் மூலைகளையும் காய்ந்த மைக்ரோஃபைபர் துணியால் துடைத்துவிடுங்கள்.
இதையும் படிங்க : Fridge : இந்த Temperature-ல் வைத்தால் கரண்ட் பில் குறையும், உணவும் நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்!
பாத்ரூம் கண்ணாடியை சுத்தம் செய்யும்போது இந்தத் தவறை செய்யாதீர்கள்!
பாத்ரூம் எப்போதும் ஈரமாக இருப்பதால், கண்ணாடிகள் சீக்கிரம் அழுக்காகிவிடும். அதனால், வாரத்திற்கு ஒருமுறையாவது முழுமையாக சுத்தம் செய்வது அவசியம். குளித்த பிறகு, பாத்ரூம் கதவைத் திறந்து வைத்து காற்றோட்டமாக வைத்தால், அதிகப்படியான ஈரம் வெளியேறிவிடும். கைரேகைகள் படிந்து மங்கலாகாமல் இருக்க, கண்ணாடியை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும்.
இதையும் படிங்க : Gold Jewellery : தங்க நகைகளை குளிக்கும் போது அணிந்தால் பளபளப்பு குறையுமா?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

